வியாழன், 20 ஜூன், 2013

புறங்கூறிப் பொய்யாகப்பேச வேண்டாம்






                    அதிகாரம் :  புறங்கூறாமை
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது                குறள் # 181
அறத்தைச் சொல்லாமல் பாவங்கள் செய்யினும் ஒருவன்
புறஞ்சொல்லான் என்றால் அதுநல்லது.                  பாமரன் பொருள்

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.        குறள் # 182
அறத்தை அழித்து அறமல்லாதவை செய்வதைவிட தீயது
(இல்லாவிடத்து) பொல்லாங்கு பேசி பொய்யாக சிரிப்பது.  பாமரன் பொருள்

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.          குறள் # 183
புறங்கூறிப் பொய்யாகப்பேசி வாழ்வதைவிட இறப்பதே
அறநூல்கள் கூறும் ஆக்கத்தைத் தரும்.      பாமரன் பொருள்

கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்        குறள் #184
கண்முன்நின்று கடுமையாகச் சொன்னாலும், சொல்லக்கூடாது
நேரில் இல்லாவரைப்பற்றி தவறான சொல்.    பாமரன் பொருள்



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.                            குறள் # 185
அறத்தைப் போற்றும் மனம்இல்லா தன்மை புறங்கூறும்
சிறுமையால் தெரிந்து கொள்ளலாம்.             பாமரன் பொருள்.

    



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.