வெள்ளி, 21 ஜூன், 2013

மற்றவர் குற்றத்தையும் தன் குற்றம் போல் பார்க்கவும்


அறத்துப்பால், இல்லறவியல், குறள்186-190

                     அதிகாரம்:புறங்கூறாமை



பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.        குறள் # 186
பிறர்மீது பழிகூறுபவன் அவனது பழிகளிலும்சில
வேறுபடத்தெரிந்து பிறரால் கூறப் படும்.        பாமரன் பொருள்

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.              குறள் # 187
புறங்கூறி தன் நண்பரைப் பிரியச்செய்வார் மகிழும்படிபேசி
நட்புறவைத் தொடரத் தெரியாதவர்.        பாமரன் பொருள்

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.      குறள் # 188
நெருக்கமானவர் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும்இயல்பினர்
என்னதான் சொல்லமாட்டார் பழகாதார்பற்றி.    பாமரன் பொருள்

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.         குறள் # 189
அறமெனக் கருதி சுமக்கிறதோ இப்பூமி, பிறர்இல்லாதபோது
பழிச்சொல் கூறுபவனது உடல்பாரத்தை.           பாமரன் பொருள்

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.          குறள் # 190
அயலார் குற்றத்தைப் போல தன்குற்றத்தையும் பார்ப்பார்களேயானால்
துன்பமுண்டோ நிலைபெற்ற வாழ்க்கைக்கு     பாமரன் பொருள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.