ஒழுக்காறாக் கொள்க
ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத
இயல்பு. குறள் 161
ஒழுக்கநெறியாக
கொள்க ஒருவன் தனது நெஞ்சில்
பொறாமை
இல்லாத இயல்பை. பாமரன் பொருள்.
விழுப்பேற்றின்
அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை
பெறின். குறள் 162
பெறக்கூடிய
சிறப்புகளில் இதனைஒத்தது இல்லை, யாரிடமும்
பொறாமை
இல்லா தன்மை பெற்றால் பாமரன்
பொருள்.
அறன்ஆக்கம்
வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப்
பான். குறள்
163.
அறமும்
உயர்வும் விரும்பாதவன் பிறருடைய உயர்வைப்
போற்றாமல்
பொறாமை படுவான். பாமரன்
பொருள்
அழுக்காற்றின்
அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு
அறிந்து குறள் 164
பொறாமையால்
தீமைகளைச் செய்யார் தீயவழிகளினால்
துன்பம்
வரும் என புரிந்தவர்கள். . பாமரன்
பொருள்
அழுக்காறு
உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது. குறள் 165.
பொறாமை உடையவருக்கு அதுவேபோதும் பகைவர்
தீங்கிழைக்கத் தவறினாலும் அது கேட்டைத் தரும் பாமரன் பொருள்
2 கருத்துகள்:
சுருக்கமான விளக்கம்... தொடர வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் said...
"சுருக்கமான விளக்கம்... தொடர வாழ்த்துக்கள்"
தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.