இல்லறவியல், ,
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. குறள்
# 201.
தீயவர்கள் அஞ்சமாட்டார் சான்றோர் அஞ்சுவர்
தீயவை எனும் மயக்கத்தைச் செய்ய. பாமரன் பொருள்.
தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். குறள் # 202
தீயசெயல்கள் தீமையை விளைவிப்பதால் தீயசெயல்கள்
தீயைவிடக் கொடியதாக அஞ்சவேண்டும். பாமரன் பொருள்.
அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
குறள் # 203.
எல்லா அறிவிலும் தலையாய அறிவு தீமை
செய்பவருக்கும் தீமை செய்யாது விடுவது. பாமரன் பொருள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. குறள்
# 204
மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக்கூடாது, நினைத்தால்
அறமே நினைத்தவனுக்குக் கேட்டைத் தரும்.
பாமரன் பொருள்.
இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. குறள் #
205
இல்லாதவன்என்று தீமைசெய்யாதீர், செய்தால்
மேலும் இல்லாதவனாகி வருந்துவீர். பாமரன் பொருள்.
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். குறள் # 206.
தீச்செயல்களைத் தான் பிறருக்கு செய்யாதீர், துன்பந்தரும்
தீவினைகள் தன்னைத் தாக்க விரும்பாதவபர்.
பாமரன் பொருள்.
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வியாது பின்சென்று அடும். குறள் # 207
எவ்வளவு கொடிய
பகைஉடையவரும் தப்பமுடியும், தீவினைப்பகை
நீங்காது பின்சென்று வருத்தும். பாமரன் பொருள்.
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வியாது அடிஇஉறைந் தற்று. குறள் # 208
தீச்செயல்கள் செய்தவர் அழிவது நிழல்அவரை
விடாது காலடியில் தங்கியதைப் போன்றது.
பாமரன் பொருள்.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். குறள் #
209.
தன்னைத்தான்
விரும்பி வாழ்பவனாயின் எவ்வளவு சிறிதாயினும்
தீச்செயல்
பிறருக்கு செய்யக்கூடாது. பாமரன் பொருள்.
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். குறள் # 210.
கேடுஇல்லாதவன் என்று அறிக, தவறான வழிச்சென்று
தீச்செயல் செய்யான் எனில். பாமரன் பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.