எல்லாரும் எள்ளப் படும். குறள்
@ 191
பலரும் வெறுக்கும்படி பயனில்லாதவை சொல்லுபவன்
எல்லோராலும் இகழப் படுவான். பாமரன் பொருள்
பயனில பல்லார்முன் சொல்லல் நயன்இல
நட்டார்கண் செய்தலிற் றீது. குறள் # 192
பயனில்லாதவற்றை பலர்முன் சொல்லுதல், வெறுப்பவற்றை
நண்பர்களிடம் செய்தலைவிட தீமையானது.
பாமரன் பொருள்
நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை.
குறள் # 193
நீதியற்றவன் என்பதைச் சொல்லும், பயனில்லாதவற்றை
விரிவாகப் பேசும் பேச்சு. பாமரன் பொருள்
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. குறள்
# 194
நீதியுடன் சேராமல் நன்மையிலிருந்து நீக்கும், பயனற்ற
பண்பற்ற சொற்களை பலரிடத்து சொல்லுதல்.
பாமரன் பொருள்
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். குறள் # 195
மேம்பாடு மதிப்போடு நீங்கிவிடும், பயனில்லாதவற்றை
நற்பண்பு உடையவர் சொன்னால். பாமரன் பொருள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.