வெள்ளி, 31 மே, 2013

அறம்பொருள் அறிந்தவரிடம் இல்லைபிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல் .           குறள் 141
பிறர்உடைமையான மனைவியை விரும்பும் அறியாமை
அறம்பொருள் அறிந்தவரிடம் இல்லை             பாமரன் பொருள்

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.                  குறள் 142
அறத்தைவிட்டு தீயவழிநடப்பவர் எல்லாரிலும் பிறர்மனைவியை
விரும்புபவர் போல அறிவிலிகள் இல்லை.      பாமரன் பொருள்

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகுபவர்.                            குறள் 143.
செத்தவரைவிட வேறுபட்டவர் அல்லர் புரிந்தே பிறர்மனைவியை  விரும்பும் தீமையைச் செய்து வாழ்பவர்                      பாமரன் பொருள்

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்  
தேரான் பிறனில் புகல்.                           குறள் 144
எவ்வளவு பெரியவராயினும் என்னவாக முடியும் கடுகளவும்
ஆராயாமல் பிறர் மனைவிவீடு செல்வது.            பாமரன் பொருள்

எளிதுஎன இல்லிறப்பான் எய்துமெஞ்ஞான்றும்
விளியாது  நிற்கும் பழி.                         குறள் 145
எளிதென்று பிறன்மனைவி நாடுபவன் அடைவான் எப்போதும் 
அழியாமல் நிற்கும் பழியை.                        பாமரன் பொருள்

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

கண்ணன் தொட்டிலை ஆட்டிய அதிரா சொன்னது…

அழகிய விளக்கங்கள் சூப்பர்.

கோமதி அரசு சொன்னது…

மிக நல்ல விளக்கம்.
வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…


திண்டுக்கல் தனபாலன் said...
"அருமை... தொடர வாழ்த்துக்கள்."

தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

Unknown சொன்னது…

athira said...
'அழகிய விளக்கங்கள் சூப்பர்'

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

Unknown சொன்னது…

Blogger கோமதி அரசு said...
''மிக நல்ல விளக்கம்.
வாழ்த்துக்கள்''

தங்கள் வாழ்த்துக்களுக்கும் ஊக்குவித்தமைக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.