வியாழன், 6 ஜூன், 2013

நம்மை இகழ்பவரைப் பொறுப்பது சிறந்தது



தோண்டுபவரையே தாங்கும் நிலம் போல நம்மை
இகழ்பவரைப் பொறுப்பது சிறந்தது     பாமரன் பொருள்
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை         குறள் 151

(பிறர் செய்த) தீங்கை பொறுத்தல் நல்லது. அதை
மறப்பது அதைவிட நல்லது.           பாமரன் பொருள்.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.           குறள் 152

வறுமையுள் வறுமை விருந்தினரை ஒதுக்குதல் வலிமையுள்
வலிமை அறிவிலார் தீங்கைப் பொறுத்தல்.   பாமரன் பொருள்
இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை    குறள் 153

நிறைவுடைமை நீங்காமலிருக்க வேண்டினால் பொறுமையைப்
பின்பற்றி வாழ வேண்டும்.          பாமரன் பொருள்
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும்  குறள் 154

தீங்குசெய்தவரை வருத்தியவரை ஒருபொருளாக மதியார்
பொறுத்தவரை பொன்போல மதிப்பர்.       பாமரன் பொருள்
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.     குறள் 155

1 கருத்து:

Avainayagan சொன்னது…

தொடர்ந்து இப்பதிவுகளைப் படித்து ஊக்குவிக்கும் தங்களுக்கு எனது நன்றிகள்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.