திங்கள், 30 செப்டம்பர், 2013

ஒழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோல் போல உதவும்.

பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 411 முதல் 415 வரை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.    குறள் # 411
செல்வங்களுள் செல்வம் கேள்விச்  செல்வமே, அச்செல்வம்
செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.    பாமரன் பொருள்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.     குறள் # 412.
செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது
வயிற்றுக்கும் உணவு தரப்படும்.       பாமரன் பொருள்

செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.    குறள் # 413.
செவிஉணவாகிய கேள்வியை உடையவர்கள் வேள்வி உணவால் நிறைவடையும் தேவர்களுக்கு சமமாவர் உலகில்.   பாமரன் பொருள்

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றுஆம் துணை.    குறள் # 414.
நூல்களைக் கற்காதவன் என்றாலும கேட்கவேண்டும் அது ஒருவருக்கு
தளர்ச்சியுற்ற காலத்தில ஊன்றுகோல் போல் துணையாகும். பாமரன் பொருள்   

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.    குறள் # 415
வழுக்கும் தரையில் ஊன்றுகோல் போல உதவும்
ஒழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்கள்.                 பாமரன் பொருள்


.

8 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் சிறப்பான அதிகாரம்... விளக்கத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா...

Viya Pathy சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//மிகவும் சிறப்பான அதிகாரம்... விளக்கத்திற்கு வாழ்த்துக்கள் ஐயா.//.

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

குறள் விளக்கங்கள் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

Viya Pathy சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
//குறள் விளக்கங்கள் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்//

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

செவிச்செல்வம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.!

avainaayagan சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//செவிச்செல்வம் பற்றி சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

athira சொன்னது…

அனைத்தும் அருமை. அதிலும் கடசி இரண்டிலும் ஊன்றுகோல் போல் துணை வரும் குறள்கள் மிக அருமை.

Viya Pathy சொன்னது…

athira said...
//அனைத்தும் அருமை. அதிலும் கடசி இரண்டிலும் ஊன்றுகோல் போல் துணை வரும் குறள்கள் மிக அருமை.//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி (உங்கள் தனி எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. சரி உங்கள் பதிவில் அதை படித்துக் கொள்கிறேன்)

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.