வியாழன், 25 டிசம்பர், 2014

முயற்சி செல்வத்தைப் பெருக்கும்.


பொருட்பால்

அரசியல்

ஆள்வினை உடைமை –
(இடைவிடாத முயற்சி உடையவனாக இருத்தல்)

குறள் 611 முதல் 620


அருமை உடைத்தென்று அசவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.          குறள் # 611
செய்வதற்கு அரிது என்று மனந்தளராமல் இருக்க வேண்டும்
பெருமைக்கான வலிமையை முயற்சி தரும்.    பாமரன் பொருள்

திங்கள், 22 டிசம்பர், 2014

சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பொருட்பால்    அரசியல்   மடியின்மை  (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.          குறள் # 601
குடிஎன்னும் அணையாத விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி மறையும்.        பாமரன் பொருள்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.       குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல் வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த விரும்புபவர்.     பாமரன் பொருள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும் முந்து.      குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு முன்பே அழியும்.       பாமரன் பொருள்

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.       குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி செய்யாதவருக்கு.      பாமரன் பொருள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.              குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் வாகனமாகும்.  பாமரன் பொருள் 

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.    குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம் சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.      பாமரன் பொருள்