திங்கள், 21 மே, 2012

அன்புடையவர் உடலையும் பிறருக்குத் தருவர்


அன்பினை அடைக்கும் தாழ்ப்பாள் உண்டோ அன்பர்
கண்ணீரே பலர் அறியச் செதுய்விடும்.  
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல் தரும்        குறள் 71

அன்பில்லாதவர் எல்லாம் தமதென்பர் அன்புடையவர்
உடலையும் பிறருக்குத் தருவர்        
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு            குறள் 72

அன்போடு இணைந்த செயல் என்பது ஆருயிர்க்கு
உடம்போடு உள்ள தொடர்பு போன்றது    
அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு         குறள் 73

அன்புடன் அமைந்த செயல் என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு  
அன்புற்று அமைந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.        குறள் 74

அறத்திற்கே அன்பு துணை என்பர் அறியாதவர்
அறமில்லாத தீமையை எதிர்க்கவும் அதுவே துணை குறள் 75
அறத்திற்கே அன்பு சார்பு என்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

ஞாயிறு, 20 மே, 2012

நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர் பெருமையே உலகில் உயர்ந்த்து



நீரின்றி இல்லை உலக வாழ்க்கைஎனில் யாருக்கும்
மழையின்றி அமையாது ஓழுங்கு        பாமரன் பொருள் 
நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஓழுங்கு = குறள் 20


ஒழுக்கத்துடன் வாழ்ந்து துறவியானோர் பெருமை
அவர்களின் அறநூல்களால் உணரலாம்  பாமரன் பொருள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு      குறள் 21


துறவிகள் பெருமை அளந்து கூறினால் உலகில்
இறந்தோரை எண்ணிக் கூறுவது போன்றது  பாமரன் பொருள்
துறந்தார்  பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று      குறள் 22



நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர்
பெருமையே உலகில் உயர்ந்த்து      பாமரன் பொருள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு        குறள் 23


அறிவுஎன்னும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கும் துறவி
துறவறம் என்னும் நிலத்திற்கு நல்விதை     பாமரன் பொருள்
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்குஓர் வித்து    குறள் 24


ஐம்புலன்அடக்கிய ஞானியர் வல்லமைக்கு வானவர் தலைவனான
இந்திரனே பொருத்தமான சான்று     பாமரன் பொருள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி          குறள் 25

வியாழன், 17 மே, 2012

ஒழுக்க நெறிபின்பற்றுபவர் நெடுங்காலம் வாழ்வர்.


மலர்மிசைஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்              குறள் 3
பக்தர் நெஞ்சில் வசிக்கும் இறவனடி வணங்குபவர்
உலகில் நீண்டகாலம் வாழ்வர் ====    பாமரன் பொருள்

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு             குறள் 5
அறியாமையும் பெருந்துன்பங்களும் வராது இறைவனின்
பொருளும் புகழும் புரிந்தவர்களுக்கு           பாமரன் பொருள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்                    குறள் 6
ஐம்புலன்களை அடக்கிய இறைவனின் உண்மையான ஒழுக்க
நெறிபின்பற்றுபவர் நெடுங்காலம் வாழ்வர்.            பாமரன் பொருள்

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது                      குறள்  8
அறக்கடவுளாம் இறைவனடி வணங்குபவர் அல்லாதவருக்கு
பாவக்கடலை நீந்துவது கடினம்                பாமரன் பொருள்

கோளில் பொறியில் குணம்இலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.                     குறள் 9
செயலில்லா ஐம்புலன்கள் பயனில்லாததுபோல் இறைவனின்
கால்களை வணங்காத் தலையும்               பாமரன் பொருள்

சனி, 5 மே, 2012

தம்மைவிட குழந்தைகள் அறிவுடையோர் என்பது எல்லோருக்கும இன்பம் தருவது


(புல்லாங்) குழலிசை யாழிசை இனிது என்பர் தம் குழந்தைகள்
மழலையைக் கேட்காதவர்கள்         பாமரன் பொருள்
குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்              குறள் 66

தந்தை குழந்தைகளுக்குச் செய்யும் உதவி சபையில்
சிறந்தவராக இருக்கச் செய்வது              பாமரன் பொருள்
தந்தைமகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்                    குறள் 67


தம்மைவிட குழந்தைகள் அறிவுடையோர் என்பது உலகில்
எல்லா மக்களுக்கும் இன்பம் தருவது   பாமரன் பொருள் 

தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது --குறள் 68   


பெற்ற நேரத்தைவிட அதிகம் மகிழ்வாள் தன்மகனை
அறிவுடையோன் எனக்கேட்கும் தாய் - பாமரன் பொருள்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் -  குறள் 69    


மகன் தந்தைக்குச்செய்யும் உதவி இவன்தந்தை
என்னதவம் செய்தானோ எனும் சொல் -பாமரன் பொருள் 
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும் சொல் - குறள் 70