திங்கள், 26 மார்ச், 2012

புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு நிமிர்ந்த நடை இல்லை


பெண்ணைவிட பெருமையானவை எவை கற்பெனும் மனஉறுதி உள்ளது எனில்.         பாமரன் பொருள்  
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்     குறள் -54

தெய்வம் தொழாவிடினும் கணவனை பெரிதும் மதிப்பவள்
வேண்டுவன வேண்டியபடி பெறுவாள்  --பாமரன் பொருள்    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை             குறள் -55

தன்னைக் காத்து கணவனையும் காத்து பெருமைசேர்க்கும்
புகழைக்காப்பதில் உறுதியுள்ளவளே பெண் --பாமரன் பொருள்   தற்காத்து தற்கொண்டான்பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விளாள் பெண்           குறள் -56

சிறைபோன்ற காவல் என்ன செய்யும் பெண்கள்
மனஉறுதியால் காப்பதே சிறந்தது   பாமரன் பொருள்  சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்       நிறைகாக்கும் காப்பே தலை            குறள் -57

கணவன் (தேவைகளைப்) பெற்றால் பெறுஞ்சிறப்பு பெறுவர்         பெண்கள் வான்புகழ் கொண்டோர் உலகில்     பாமரன் பொருள்   
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெறுஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு           குறள் -58

புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு இல்லை பழிப்பவர் முன் தலை நிமிர்ந்த நடை          பாமரன் பொருள்  
புகழ்புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை                    குறள் -59

மங்கலம் ஆகும் மனைவியின் நல்லொழுக்கம் மேலும்
அணிகலன் நல்ல குழந்தைகளே         பாமரன் பொருள்  
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட்பேறு            குறள்-60




செவ்வாய், 13 மார்ச், 2012

மனைவி நற்பண்புடையவளானால் வாழ்வில் இல்லாதது என்ன?


மனைவி நற்பண்புடையவளானால் வாழ்வில் இல்லாதது என்ன

இல்வாழ்வுக்கான நற்பண்பு உடையவளாகி கணவனின்
வசதிக்கேற்ப வாழ்பவளே நற்துணைவி              பாமரன் குறள்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை                  குறள் 51

குடும்பப்பாங்கு மனைவியிடம் இல்லையெனில் வாழ்க்கை
எவ்வளவு சிறப்புடையதாயினும் பயனில்லை            பாமரன் குறள்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.                            குறள் 52

மனைவி நற்பண்புடையவளானால் இல்லாதது என்ன அப்படி
இல்லையெனில் இருப்பதுதான் என்ன                   பாமரன் குறள்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை                         குறள் 53

வெள்ளி, 2 மார்ச், 2012

நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது


நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது


அறவழியில் இல்வாழ்க்கை வாழ்வதானால் வேறுவழியில்
சென்று பெறப்போவது என்ன?                      பாமரன் குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய்ப் பெறுவ தெவன்                         குறள் 46

இயல்போடு இல்வாழ்க்கை வாழும் ஒருவன்
வாழமுயலும் எல்லோருள்ளும் சிறந்தவன்.          பாமரன் குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை                     குறள் 47

அறம்தவறா நடத்தையால் நல்வழிகாட்டும் நல்லறம்
துறவிகளின் தவத்தைப் போன்றதாகும்               பாமரன் குறள்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து                   குறள் 48

அறம்எனச் சொல்லப்பட்டதே இல்வாழ்க்கை அதுவும்
பிறரால் பழிக்கப்படாமல் இருப்பது நல்லது            பாமரன் குறள்
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்ப்ழிப்ப தில்லாயின் நன்று                        குறள் 49

உலகில் அறநெறியில் வாழ்பவன் வானுலகின்
தெய்வமாக மதிக்கப்படுவான்.                        பாமரன் குறள்
வையத்தின் வழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்                         குறள் 50