சனி, 24 செப்டம்பர், 2011

சரியான நேரத்தில் செய்யும் உதவி



சரியான நேரத்தில் செய்யும் உதவி

ஒருவர் ஒரு உதவி வேண்டும் என்று கேட்கிறார் என்றால் அதை உடனடியாக செய்யவேண்டும் “நாளை செய்கிறேன்” “பிறகு பார்க்கலாம்” என்று தள்ளிப் போடக்கூடாது. சரியான நேரத்தில் அவ்வுதவி  கிடைக்கவில்லை என்றால் அதனால் அவருக்கு பல துன்பங்கள் நேரலாம். தாமதமாக செய்யப்படும் உதவி பயன் இல்லாமலே கூட போய்விடலாம். எனவே தேவையான நேரத்தில் அவ்வுதவி கிடைக்குமென்றால் மிக மிக பயன் தருவதாக இருக்கும். அதனால்தான் சரியான நேரத்தில் செய்யும் உதவியை உலகத்தைவிட பெரிதாக இருக்கும் என்று கூறுகிறார் திருவள்ளுவர் 


(தேவயான)  நேரத்தில் செய்த உதவி சிறிதெனினும்
உலகத்தைவிட மிகப் பெரியது.
                                                                         பாமரன் குறள்


காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது           குறள் 102 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

உங்களால் முடிந்தவரை உதவி செய்யுங்கள்




உங்களுடன் வாழ்பவர்களுக்கு வீ ட்டில் இருப்பவர்களுக்கு, தெரிந்தவர்களுக்கு, உதவி என கேட்பவர்களுக்கு என அனைவருக்கும் உதவி செய்யுங்கள். யார் யாருக்கு முடியுமோ, எவ்வப்பொழுது முடியுமோ, எங்கெங்கு முடியுமோ, என்னென்ன செய்ய முடியுமோ, எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவிற்கு உதவி செய்யுங்கள். எனவேதான் திருவள்ளுவர் பத்து குறள்களில் உதவி செய்வதன் அவசியத்தை மிக அழகாக விளக்கியுள்ளார். செய்நன்றி அறிதல் அதிகாரத்தில்  சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்துமே முத்தானவை.

 
(உதவி) செய்யாமல் செய்த உதவிக்கு பூவுலகமும்
வானுலகமும் தந்தாலும் ஈடாகாது.
                                                                     பாமரன் குறள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வாணகமும் ஆற்றல் அரிது            திருக்குறள்    101

Unhelped in turn good help given 101
Exceeds in worth earth and heaven.

வியாழன், 15 செப்டம்பர், 2011

பாமரனுக்கான திருக்குறள்



"அ"வை முதலாகக் கொண்டன எழுத்துக்கள். ஆதிபகவனை

முதலாகக் கொண்டது உலகம்.
                                                                                பாமரன்  குறள்


"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
                                                           திருக்குறள்

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

பள்ளிக்கூடங்களில் திருக்குறள் சொல்லிக் கொடுத்தார்கள். பத்து அல்லது இருபது குறள்கள் படிக்க வேண்டும். பதவுரை, பொழிப்புரை, மனப்பாடம் எல்லாம் இருந்தும் அவற்றை படிப்பது நல்லது வாழ்க்கைக்குப் பயன்படும் என்று புரியவில்லை.
பின்னாட்களில் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு படித்த போதுதான் அதன் சிறப்புக் கள் தெரியவந்தன. அதில் மேலாண்மைத் தத்துவங்களும் மற்ற பொருள் பொதிந்த கருத்துக்களும் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளன என்பதும் புரிந்தது. மற்றவர்களும் இவற்றைப் படித்து பயன் பெற வேண்டும் என்பதற்காக திருக்குறளை பாமரனுக்கும் புரியும் படியாக சொல்ல ஆசைப்பட்டேன் அதன் விளைவே இக்குறள்கள்:

"இன்சொல் இருக்க இனிமையில்லா சொல் பேசுவது
பழமிருக்க காயைச்  சாப்பிடுவது போன்றது"

"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"
                                                             குறள்

சனி, 10 செப்டம்பர், 2011

பிள்ளையார் சுழி

நாமும் ஒரு பிளாக் எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கு நீண்ட காலமாகவே இருந்தது. .பல பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிய  அனுபவம்வேறு.   என் கட்டுரை களை புத்தகமாகப் போடவும் ஆசை .  எல்லாவற்றிற்குமாக சேர்த்து இப்போது எனக்கு இந்த பிளாக் கிடைத்திருக்கிறதே இதை விட்டுவிடலா மா?  விடாது கருப்பு மட்டுமல்ல என் எழுத்துக்களும்தான்

பாமரனுக்கான திருக்குறள்:-
செய்யக்கூடாதவை  செய்வதால் கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்
(செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை  யாலும் கெடும்  --  குறள்)