திங்கள், 22 டிசம்பர், 2014

சோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

பொருட்பால்    அரசியல்   மடியின்மை  (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.          குறள் # 601
குடிஎன்னும் அணையாத விளக்கானாலும் சோம்பல் எனும்
மாசுபடிய மங்கி மறையும்.        பாமரன் பொருள்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.       குறள் # 602
சோம்பலை விடுத்து வாழ்தல் வேண்டும் தன்குடியை
நற்குடியாக உயர்த்த விரும்புபவர்.     பாமரன் பொருள்

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னிலும் முந்து.      குறள் # 503
சோம்பலைப் பழக்கமாக்கி வாழும் அறிவில்லாதவன் பிறந்த
குடும்பம் அவனுக்கு முன்பே அழியும்.       பாமரன் பொருள்

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.       குறள் # 604
குடும்பப் பெருமை அழிந்து குற்றமும் பெருகும் சோம்பலில் வீ..ழ்ந்து
சிறந்த முயற்சி செய்யாதவருக்கு.      பாமரன் பொருள்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.              குறள் # 605
காலம் தாழ்த்துதல் மறதி சோம்பல் அதிகதூக்கம் எனும் நான்கும்--
கெடுகெடுகின்ற ஒருவர் விரும்பி ஏறும் வாகனமாகும்.  பாமரன் பொருள் 

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.    குறள் # 606
ஆள்பவர் செல்வமெல்லாம் சேர்ந்த போதிலும் சோம்பலுடையவர்
சிறந்த பயனை அடைய முடியாது.      பாமரன் பொருள்
    
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.            குறள் # 607
இடித்துக் கூறி இகழும் சொல் கேட்பர் சோம்பலில் வீழ்ந்து
சிறந்த முயற்சி இல்லாதிருப்பவர்.              பாமரன் பொருள்


மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.        குறள் # 608
சோம்பல் நற்குடிபிறந்தவனிடம் தங்கினால் அது அவனது பகைவர்களுக்கு
அடிமை ஆக்கி விடும்.              பாமரன் பொருள்

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.      குறள் # 609
குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் ஒருவன்
ஆட்கொண்டுள்ள சோம்பலை அகற்ற நீங்கும்      பாமரன் பொருள்

மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.       குறள் # 610
சோம்பல் இல்லாத ஆள்பவர் அடைவர், தன்னடியால் உலகை அளந்தவன்
கடந்த உலகம் முழுவதையும்.               பாமரன் பொருள்


6 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தம 1

Unknown சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
நன்றி நண்பரே---

தங்கள் வருகைக்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

உண்மைதான் சோம்பல் இருப்பின் எதுவும் நடக்காது...

அது சரி நீங்க மேலே வோட் பண்ணல்லியோ?:) மீயும் பண்ணிட்டேன்:).

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

இந்த அதிகாரத்தையும் எழுத வேண்டும் ஐயா...

Unknown சொன்னது…

athira சொன்னது…
""உண்மைதான் சோம்பல் இருப்பின் எதுவும் நடக்காது."""..

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…
அருமை... இந்த அதிகாரத்தையும் எழுத வேண்டும் ஐயா..

வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. நிச்சயமாக எழுதுங்கள்.விரைவில் எதிர் பார்க்கிறேன்.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.