திங்கள், 30 செப்டம்பர், 2013

ஒழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்கள் ஊன்றுகோல் போல உதவும்.

பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 411 முதல் 415 வரை

செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.    குறள் # 411
செல்வங்களுள் செல்வம் கேள்விச்  செல்வமே, அச்செல்வம்
செல்வங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.    பாமரன் பொருள்

செவிக்குஉணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.     குறள் # 412.
செவிக்கு உணவு இல்லாத பொழுது சிறிது
வயிற்றுக்கும் உணவு தரப்படும்.       பாமரன் பொருள்

செவிஉணவின் கேள்வி உடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.    குறள் # 413.
செவிஉணவாகிய கேள்வியை உடையவர்கள் வேள்வி உணவால் நிறைவடையும் தேவர்களுக்கு சமமாவர் உலகில்.   பாமரன் பொருள்

கற்றிலன் ஆயினும் கேட்க அஃதுஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றுஆம் துணை.    குறள் # 414.
நூல்களைக் கற்காதவன் என்றாலும கேட்கவேண்டும் அது ஒருவருக்கு
தளர்ச்சியுற்ற காலத்தில ஊன்றுகோல் போல் துணையாகும். பாமரன் பொருள்   

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.    குறள் # 415
வழுக்கும் தரையில் ஊன்றுகோல் போல உதவும்
ஒழுக்கம் உடையவரின் வாய்ச்சொற்கள்.                 பாமரன் பொருள்


.

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

கல்லாதவர்கள் எதற்கும் பயன்படாத களர் நிலம் போன்ற வர்கள்


 பால்; பொருட்பால்
அரசியல்
அதிகாரம் ; கல்லாமை
குறள் 406 முதல் 410 வரை.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.            குறள் # 406
உயிரோடு உள்ளனர் என்ற அளவிலில்லாமல் ஒன்றுக்கும் பயன்படாத
களர்நிலத்தைப் போன்றவரே படிக்காதவர்.     பாமரன் பொருள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.         குறள் # 407
நுட்பமான பெருமையுடைய நூல்களை ஆராயும் அறிவு இல்லாதவன் நல்லழகு
மண்ணால்சிறப்பாக செய்யப்பட்டபொம்மை போன்றதே.   பாமரன் பொருள்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.        குறள் # 408
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட கொடியதாகும்
கல்லாதவர்களிடம் உள்ள செல்வம்.        பாமரன் பொருள்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.     குறள் # 409
மேல்குடியில் பிறந்தவரெனினும் கல்லாதவர் கீழ்க்குடியில்பிறந்தவரெனினும்
கற்றவரைப்போன்ற பெருமை இல்லாதவர்.      பாமரன் பொருள்

விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.         குறள் # 410
மிருகங்களிலிருந்து மக்கள் வேறுபட்டவர் போல சிறந்தநூல்
கற்றவரிலிருந்து கல்லாதவர் வேறுபட்டவராவர்.    பாமரன் பொருள்

சனி, 14 செப்டம்பர், 2013

கல்வி கற்றதற்கு தகுந்தபடி நடக்க வேண்டும்


பொருட்பால்      
அரசியல்  அதிகாரம் – கல்வி
குறள் எண் 391 - 395
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.         குறள் # 391
கற்க பிழையில்லாது கற்கவேண்டியவை, கற்றபின்
நடக்கவேண்டும் கற்றதற்கு தகுந்தபடி.     பாமரன் பொருள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.     குறள் # 382
எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இரண்டும்
கண்கள் என்று சொல்வர் மக்களுக்கு.     பாமரன் பொருள்

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.     குறள் # 383
கண்ணுடையவர் என்பவர் கற்றோரே. முகத்தில்இரண்டு
புண்ணுடைவராவார் கல்வி கல்லாதவர்.    பாமரன் பொருள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.    குறள் # 384
மனம்மகிழ கூடிப்பழகுவதும் எப்போது சந்திப்போம் என பிரிவதும்
எல்லாமும் புலவர் செயல்.                 பாமரன் பொருள்      

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.        குறள் # 385
செல்வந்தர்முன் ஏழைபோல ஏக்கத்துடன் நின்று கற்றவர் உயர்ந்தவர்
இழிந்தவரே கல்லாதவர்கள்.                  பாமரன் பொருள்


திங்கள், 9 செப்டம்பர், 2013

விதியில்லையெனில் கஷ்டப்பட்டு காத்தாலும் தங்காது


குறள் பால்; அறத்துப்பால்  குறள் இயல் ஊழியல் அதிகாரம் - ஊழ் 

குறள் எண்  376 முதல் 380 வரை


பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.                       குறள் # 376
வருந்திக் காத்தாலும் தங்காது விதியில்லையெனில் நாமே
வெளியே எடுத்துப்போட்டாலும் போகாது நமதாயின்.    பாமரன் பொருள்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.     குறள் # 377
ஊழால் விதித்த விதிப்படியில்லாமல் கோடிப் பொருள்களை
சேர்த்தவருக்கு அவற்றை அனுபவிப்பது கடினம்.     பாமரன் பொருள்

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.      குறள் # 378
துறவு மேற்கொள்வர் நுகர் பொருளில்லாதவர் ஊழின்காரணமாய்
துன்பங்கள் கஷ்டப்படுத்தாமல் ஒழியுமென்றால்.,        பாமரன் பொருள்

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.           குறள் # 379
நல்லதுநடக்கும்போது நல்லதாகப் பார்ப்பவர் தீயன நடந்தால்
கலங்கி துன்பப் படுவது ஏனோ?                     பாமரன் பொருள்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.     குறள்  # 380
விதியைவிட மிக்க வலிமையானவை எவை உள்ளன மற்றொன்றை ஆராய்ந்தாலும் அதுவே முன்வந்து நிற்கும்.         பாமரன் பொருள்


சனி, 7 செப்டம்பர், 2013

வருவதற்குரிய ஊழால் உண்டாகும் சோர்வில்லா முயற்சி




குறள் பால்; அறத்துப்பால்  குறள் இயல் ஊழியல் அதிகாரம் - ஊழ் 

குறள் எண்  371 முதல் 375 வரை

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி    குறள் # 371
வருவதற்குரிய ஊழால் உண்டாகும் சோர்வில்லா முயற்சி கைப்பொருள்
போவதற்கான விதியால் ஏற்படும் சோம்பல்.        பாமரன் பொருள்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.         குறள் # 372
அறியாமையை உண்டாக்கும் இழப்பதற்கான ஊழ் அறிவைப் பெருக்கும்
ஆவதற்கான விதி இருந்தால்.    .        பாமரன் பொருள்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.      குறள் @ 373
நுட்பமான நூல்கள் பல கற்றாலும் விதியின்படி தன்னுடைய
இயல்பான அறிவே மேலோங்கும்    .        பாமரன் பொருள்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.     குறள் # 374
இருவகைப்பட்டது உலகத்து இயல்பு செல்வம் உடையவராதல் வேறு
அறிவுடையராதல் வேறு.                .        பாமரன் பொருள்

நல்லவை எல்லாந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.     குறள் # 375
விதியினால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் தீயவை
நல்லவை ஆதலும் உண்டு பொருளீட்டும் முயற்சியில்  பாமரன் பொருள்



செவ்வாய், 3 செப்டம்பர், 2013

ஆசையில்லா நிலை போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை


குறள் பால்: அறத்துப்பால். 
குறள் இயல்: துறவறவியல். 
அதிகாரம்: அவாவறுத்தல்.

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.       குறள் # 361
ஆசைஎன்பது எல்லா உயிர்களுக்கும் எப்பொழுதும்
தவறாமல் வரும் பிறப்பைத்தருகின்ற விதை       பாமரன் பொருள்

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.     குறள் # 362
வேண்டும்போது பிறவாமையை விரும்பவேண்டும் அது
ஆசையற்ற நிலையை வேண்டுகிறபோது வரும்.         பாமரன் பொருள்

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.          குறள் # 363
ஆசையில்லா நிலை போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் இல்லை
வேறெங்கும்கூட அதற்கு நிகரானது இல்லை.          பாமரன் பொருள்


தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.        குறள் # 364
தூய்மை என்பது ஆசையில்லாது இருப்பதே அத்தன்மை
மெய்ப்பொருளை வேண்டும்போது வரும்.           பாமரன் பொருள்

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.        குறள் # 365
பற்றற்ற துறவிஎனப்படுவர் ஆசைகளை விட்டவரே மற்றவர்
மழுவதுமாக விட்டவர் இல்லை.                   பாமரன் பொருள்