சனி, 14 செப்டம்பர், 2013

கல்வி கற்றதற்கு தகுந்தபடி நடக்க வேண்டும்


பொருட்பால்      
அரசியல்  அதிகாரம் – கல்வி
குறள் எண் 391 - 395
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.         குறள் # 391
கற்க பிழையில்லாது கற்கவேண்டியவை, கற்றபின்
நடக்கவேண்டும் கற்றதற்கு தகுந்தபடி.     பாமரன் பொருள்

எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.     குறள் # 382
எண்கள் மற்றும் எழுத்துக்கள் ஆகிய இரண்டும்
கண்கள் என்று சொல்வர் மக்களுக்கு.     பாமரன் பொருள்

கண்உடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.     குறள் # 383
கண்ணுடையவர் என்பவர் கற்றோரே. முகத்தில்இரண்டு
புண்ணுடைவராவார் கல்வி கல்லாதவர்.    பாமரன் பொருள்

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.    குறள் # 384
மனம்மகிழ கூடிப்பழகுவதும் எப்போது சந்திப்போம் என பிரிவதும்
எல்லாமும் புலவர் செயல்.                 பாமரன் பொருள்      

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.        குறள் # 385
செல்வந்தர்முன் ஏழைபோல ஏக்கத்துடன் நின்று கற்றவர் உயர்ந்தவர்
இழிந்தவரே கல்லாதவர்கள்.                  பாமரன் பொருள்


13 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை ஐயா...

Just Visit : http://venkatnagaraj.blogspot.com/2013/09/5.html (படம்-4:)

Viya Pathy சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை ஐயா.//

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி. ( என் படத்தைப் பற்றிய தகவல் தந்தடுவிட்டேன்-- அதற்கும் நன்றி)

கோமதி அரசு சொன்னது…

கல்வியின் சிறப்பை அழகாய் கூறினீர்கள்.
அருமையான திருக்குறள் விளக்கம்.
வாழ்த்துக்கள்.

Viya Pathy சொன்னது…

கோமதி அரசு said...
கல்வியின் சிறப்பை அழகாய் கூறினீர்கள்.
அருமையான திருக்குறள் விளக்கம்.
வாழ்த்துக்கள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

athira சொன்னது…

உண்மைதான்ன்... கற்றோருக்கு எங்கு சென்றாலும் மதிப்புத்தான்ன்.. கற்றதன்படி அவர்கள் நிற்குமிடத்து.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கண்ணுடையவர் என்பவர் கற்றோரே. முகத்தில்இரண்டு
புண்ணுடைவராவார் கல்வி கல்லாதவர்.

கல்வியின் அவசியத்தை அருமையாக உணர்த்திய குறட்பாக்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

கல்வியின் அவசியத்தை அருமையாக உணர்த்திய குறட்பாக்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.

Viya Pathy சொன்னது…

athira said...
//உண்மைதான்ன்.... கற்றோருக்கு எங்கு சென்றாலும் மதிப்புத்தான்ன். கற்றதன்படி அவர்கள் நிற்குமிடத்து//

''கற்றதன்படி அவர்கள் நிற்குமிடத்து கற்றோருக்கு எங்கு சென்றாலும் மதிப்புத்தான்ன்.'' இது ரொம்பவே நல்லா இருக்குங்க. தங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி

Viya Pathy சொன்னது…

athira said...
//உண்மைதான்ன்.... கற்றோருக்கு எங்கு சென்றாலும் மதிப்புத்தான்ன். கற்றதன்படி அவர்கள் நிற்குமிடத்து//

''கற்றதன்படி அவர்கள் நிற்குமிடத்து கற்றோருக்கு எங்கு சென்றாலும் மதிப்புத்தான்ன்.'' இது ரொம்பவே நல்லா இருக்குங்க. தங்கள் கருத்துப் பதிவிற்கு நன்றி

Viya Pathy சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
''கல்வியின் அவசியத்தை அருமையாக உணர்த்திய குறட்பாக்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!''

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

Viya Pathy சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
''கல்வியின் அவசியத்தை அருமையாக உணர்த்திய குறட்பாக்களின் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்''

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

இளமதி சொன்னது…

கல்வியின் சிறப்பு கணக்கிலடங்காதது...

செய்யும் செயலே கூறிடும் அவர்தம் கல்வியறிவை!..

அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே!

Viya Pathy சொன்னது…

இளமதி said...
/கல்வியின் சிறப்பு கணக்கிலடங்காதது...செய்யும் செயலே கூறிடும் அவர்தம் கல்வியறிவை!..அருமை! வாழ்த்துக்கள் சகோதரரே//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.