ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

கல்லாதவர்கள் எதற்கும் பயன்படாத களர் நிலம் போன்ற வர்கள்


 பால்; பொருட்பால்
அரசியல்
அதிகாரம் ; கல்லாமை
குறள் 406 முதல் 410 வரை.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.            குறள் # 406
உயிரோடு உள்ளனர் என்ற அளவிலில்லாமல் ஒன்றுக்கும் பயன்படாத
களர்நிலத்தைப் போன்றவரே படிக்காதவர்.     பாமரன் பொருள்

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.         குறள் # 407
நுட்பமான பெருமையுடைய நூல்களை ஆராயும் அறிவு இல்லாதவன் நல்லழகு
மண்ணால்சிறப்பாக செய்யப்பட்டபொம்மை போன்றதே.   பாமரன் பொருள்

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.        குறள் # 408
நல்லவரிடம் உள்ள வறுமையைவிட கொடியதாகும்
கல்லாதவர்களிடம் உள்ள செல்வம்.        பாமரன் பொருள்

மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.     குறள் # 409
மேல்குடியில் பிறந்தவரெனினும் கல்லாதவர் கீழ்க்குடியில்பிறந்தவரெனினும்
கற்றவரைப்போன்ற பெருமை இல்லாதவர்.      பாமரன் பொருள்

விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.         குறள் # 410
மிருகங்களிலிருந்து மக்கள் வேறுபட்டவர் போல சிறந்தநூல்
கற்றவரிலிருந்து கல்லாதவர் வேறுபட்டவராவர்.    பாமரன் பொருள்

6 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

கல்லாமை குறள் விளக்கம் அருமை.

Jaleela Kamal சொன்னது…

அருமை

Viya Pathy சொன்னது…

கோமதி அரசு said...
/கல்லாமை குறள் விளக்கம் அருமை//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

Viya Pathy சொன்னது…

Jaleela Kamal said...
//அருமை//

தங்கள் வருகைக்கும் தங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கும் நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தொடர வாழ்த்துக்கள்...

Viya Pathy சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை... தொடர வாழ்த்துக்கள்//.

தங்கள் வருகைக்கு நன்றி. வாழ்த்துக்களுக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.