புதன், 30 நவம்பர், 2011

நெடுங்கடலின் நீர் வளமும் குறையும்


நெடுங்கடலும் தன்நீர்வளம் குறையும் ஆவியான கடல்நீர்
மழையாகப் பெய்யா விட்டால்                       பாமரன் குறள்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்                குறள் -17

சிறப்பாக பூஜைகள் நடவாது, வானம் பெய்யாது
போனால், வானத்தவர்க்கு விழாக்கள் இராது.          பாமரன் குறள்

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல்  வானோர்க்கும் ஈண்டு  குறள் -18
    
தானம், தவம் இரண்டும் நடவாது பேருலகில்
வானம் மழை பெய்யா தெனின்                பாமரன் குறள்

தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்                குறள் -19
       

ஞாயிறு, 27 நவம்பர், 2011

கெடுப்பதும் , கொடுப்பதும் எல்லாம் மழை.


ஏரின் உழார் உழவர் புயல் என்னும்
வாரி வழங்குன்றிக்கால்              திருக்குறள் 14

ஏர்உழவு செய்யமாட்டார் உழவர் புயலெனும்
மழை குறைந்து போனால்                         பாமரன் குறள்


கெடுப்பதூம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை                  திருக்குறள் 15

பெய்யாது கெடுப்பதும் கெட்டவர்களுக்கு ஆதரவாய்
கொடுப்பதும் எல்லாம் மழை.                       பாமரன் குறள்


விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பதரிது                      திருக்குறள் 16          

விண்ணிலிருந்து மழை பெய்யாமல் உலகில்
பசும்புல் வளர்வது அரிது                              பாமரன் குறள்

வெள்ளி, 18 நவம்பர், 2011

மழையின் சிறப்பு

 


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்                                       இறைவன் அடிசேரா தார்            குறள்   10   

 பிறவிக் கடலை கடக்க முயல்வோர், கடக்கமாட்டார்                     கடவுள்  திருவடி வணங்காதவர்           பாமரன் குறள்

வானின்று உலகம் வழங்கி வருதலால்                                   தானமிழ்தம் என்றுணரற் பாற்று           குறள் 11

(பயன்தரும்) மழையை வானம் உலகுக்கு வழங்குவதால்                   மழையை அமிர்தமென உணர்க                பாமரன் குறள்.


விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி                         குறள் 13


வானிலிருந்து மழை பெய்யாவிடில் கடல்சூழ் உலகத்தில்          உள்ளிருந்து உயிர்களை வாட்டும் பசி      பாமரன் குறள்.

                                   

வியாழன், 10 நவம்பர், 2011

செயறகரிய செய்வார் பெரியர்


செயற்கரிய செய்வார் பெரியோர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்                                              திருக்குறள்  26

செய்வதற்கு அரியவற்றைச் செய்வர் பெரியோர், சிறியர்
செய்வதற்கு அரியவற்றைச் செய்ய முடியாதவர்கள் !              பாமரன் பொருள்


உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்                            திருக்குறள்  140


உலகத்தோடு சேர்ந்து வாழும்வழி பல கற்றிடினும்
கல்விகல்லாதவர் அறிவில் லாதவரே!                    பாமரன் பொருள்