வெள்ளி, 26 அக்டோபர், 2012

நல்லுதவியை மறப்பது நல்லதல்ல


மறவாதீர் குற்றமற்றவரின் நட்பு,விட்டுவிடாதீர்
துன்பத்தில் உதவி செய்தவர் நட்பு
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு   குறள்     106

எந்நாளும் எப்போதும் நினைப்பர் நம்முடைய
துன்பம் போக்கியவர் நட்பு
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்
விழுமம் துடைத்தவர் நட்பு.         குறள்   107

நல்லுதவியை மறப்பது நல்லதல்ல தீமையை
அப்பொழுதே மறப்பது நல்லது.
நன்றிமறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.         குறள்   108

கொலைபோன்ற தீமை செய்தாலும் அவர் செய்த
நன்மை ஒன்றை நினைத்தால் கோபம்போகும்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்று நன்றுள்ளக் கெடும்.        குறள்  109

எந்த அறத்தை அழித்தாலும் வாழ்க்கை உண்டு வாழ்வில்லை
செய்த உதவியை மறந்தவருக்கு.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம்  உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு        குறள்  110

நடுநிலை எனபது நல்லது  பலதிறம்பட்டவருடன்
இணைந்து பழகும் போது
தகுதிஎன ஒன்றுநன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப்பெறின்             குறள்-111
.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

நேரத்தில் செய்த உதவி உலகத்தைவிட பெரியது


(உதவி) செய்யாமல் செய்த உதவிக்கு பூவுலகமும்
வானுலகமும் தந்தாலும் ஈடாகாது
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது  குறள் -101

தேவையான நேரத்தில் செய்த உதவி சிறிதெனினும்
உலகத்தைவிட மிகப் பெரியது
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மிகப் பெரிது     குறள் 102

பலன் எதிர்பாராமல் செய்தஉதவியை ஆராய்ந்தால்
நன்மை கடலைவிடப் பெரியது
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது    குறள்    103

தினையளவே உதவி செய்தாலும் பனைமர அளவாகக்
கருதுவார் அதன் பலன் தெரிந்தவர்
தினைத்துணை நன்றி செயினும் பனைத்தூணையாக்
கொள்வர் பயன்தெரி வார்    குறள்   104

உதவியின் அளவு அவ்உதவியைப் பொருத்ததல்ல உதவி
பெற்றவரின் பண்பைப் பொருத்தது 
உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து   குறள்  105

வெள்ளி, 19 அக்டோபர், 2012

இனிய சொல் எப்போதும் இன்பம் தரும்


பணிவுஉடையவர் இனிதேபேசுபவர் ஆவது ஒருவருக்கு
நகைபோல மற்றவை அல்ல
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு  
அணிஅல்ல மற்றுப் பிற       குறள் 95

தீயவை மறைந்து நன்மை பெருகும் நல்லவற்றை
எதிர்நோக்கி இனிதே பேசினால் 
அல்லவை தேயஅறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்    குறள் 96 

மகிழ்ச்சிதந்து நன்மையும் தரும் பயன்தருபவற்றை
பண்போடு பேசப்படும் சொல்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்       குறள் 97

தீமைநீங்கிய இனியசொல் பிற்காலத்திலும்
இப்போதும் இனிமை தரும்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்     குறள் 98

இனியசொல் இன்பம்தருவதைக் காண்பவர் இப்படி
கடுமையான சொற்களைப் பேசுவரோ!
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது        குறள் 99

இன்சொற்கள் இருக்க தீச்சொற்கள் பேசுவது
பழமிருக்க காயை சாப்பிடுவதுபோன்றது
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று      குறள் 10

செவ்வாய், 9 அக்டோபர், 2012

உளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது மகிழ்ச்சியுடன் இனிதே பேசுவது


வீட்டிலிருந்து உபசரித்து வாழ்வதெல்லாம் விருந்தினரை உபசரித்து 
உதவிகளைச் செய்வதற் காகவே        பாமரன் பொருள்
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம்விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.  குறள்- 81


இந்த அளவுதான் என்ற ஒன்று இல்லை விருந்தினரின்
தகுதியின் அளவே உபசரிப்பின் பயன்       பாமரன் பொருள்
இணைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப்பயன்     குறள் 87


செல்வமிருந்தும் இல்லை எனும் நிலை விருந்து உபசரித்து போற்றா
மடமை அறிவில்லாதவரிடம் உண்டு         பாமரன் பொருள்
உடைமையுள் இன்மை விருந்துஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு      குறள் 89

முகர்ந்து பார்க்க வாடும் அனிச்சமலர் முகம் கோணி
பார்க்க வாடுவர் விருந்தினர்                 பாமரன் பொருள்
மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து       குறள் 90


இனிய சொல்லால் அன்புடன் பேசுபவர் கபடம் இருக்காது
அறப்பொருள் கண்டவர் வாய்ச்சொல்           பாமரன் பொருள்
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இலவாம்
செம்பொருள் கண்டார் வாய்ச்சொல்    91


உளம் மகிழ்ந்து கொடுப்பதைவிட நல்லது முகம் மகிழ்ந்து
இனிதே பேசுபவராக ஆதல்              பாமரன் பொருள்
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகன்அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்  குறள் 92

முகம் மலரந்து இனிது நோக்கி மனதாலும்
இனிமையாகப் பேசுவதே அறம்        பாமரன் பொருள்
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம் குறள் 93