வியாழன், 10 அக்டோபர், 2013

பார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்

பொருட்பால் அரசியல்
 இறைமாட்சி
குறள் 386 முதல் 390 வரை 

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்      குறள் # 386
பார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால்
மிகவும் போற்றுவர் மக்கள்             பாமரன் பொருள்

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொல்லால்
தான்கண் டனைத்துஇவ் உலகு,    குறள் # 387
இனியசொல்லுடன் கொடுத்துகாக்க வல்லவர்க்கு தன்சொல்லால்
எண்ணிய அனைத்தும் தரும் இவ்வுலகு        பாமரன் பொருள்

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறைஎன்று வைக்கப் படும்.    குறள் # 388
அறம், நீதி தவறாது மக்களைக் காக்கும் அரசை மக்கள்
தெய்வமாக மதித்து வணங்குவர்         பாமரன் பொருள்

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு.     குறள் # 389
காதுபொறுக்கமுடியா சொற்களையும் பொறுக்கும் பண்புடைய அரசு
குடையின் கீழ் தங்கவிரும்புவர் உலகமக்கள்        பாமரன் பொருள்

கொடைஅளி செங்கோல் குடிஓம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க்கு ஒளி.    குறள் # 390
தரும்குணம் இரக்கம் நேர்மைதவறாமை மக்கள்நலன் காத்தல் நான்கும்
உடைய அரசே அரசுகளுக்கு முன்னோடி.        பாமரன் பொருள்

17 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விளக்கம் அருமை ஐயா...

பெயரில்லா சொன்னது…

"காதுபொறுக்கமுடியா சொற்களையும் பொறுக்கும் பண்புடைய அரசு
குடையின் கீழ் தங்கவிரும்புவர் உலகமக்கள்" -

தற்போதைய இந்திய அரசு அடுத்த தேர்தலில் வெல்லும் என்றே நினைக்கிறேன். 

Unknown சொன்னது…

"திண்டுக்கல் தனபாலன் said...
விளக்கம் அருமை ஐயா.."
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இனியசொல்லுடன் கொடுத்துகாக்க வல்லவர்க்கு தன்சொல்லால்
எண்ணிய அனைத்தும் தரும் இவ்வுலகு

இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

இளமதி சொன்னது…

அற்புதமான கருத்துக்கள் ஐயா!

இனிமை எதில் உண்டோ இல்லையோ எமது சொற்களில் வார்த்தையில் இல்லாதுபோனால் வாழ்வே வீணாகிவிடும்... அருமை!

வாழ்த்துக்கள் ஐயா!

ராஜி சொன்னது…

இதமான வார்த்தைகள் இப்பூவுலகையே நம் கைக்குள் கொண்டு வந்துவிடும்

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said..
"இனிய பகிர்வுகள்..பாராட்டுக்கள்.."

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

Unknown சொன்னது…

இளமதி said...
//அற்புதமான கருத்துக்கள் ஐயா!
இனிமை எதில் உண்டோ இல்லையோ எமது சொற்களில் வார்த்தையில் இல்லாதுபோனால் வாழ்வே வீணாகிவிடும்... அருமை! வாழ்த்துக்கள் ஐயா//

மிக சரியாகச் சொன்னீர்கள். தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி

Unknown சொன்னது…

ராஜி said...
//இதமான வார்த்தைகள் இப்பூவுலகையே நம் கைக்குள் கொண்டு வந்துவிடும்//

மிகவும் நன்றாக சொன்னீர்கள். உண்மையான வார்த்தைகள். தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கோமதி அரசு சொன்னது…

இனியசொல்லுடன் கொடுத்துகாக்க வல்லவர்க்கு தன்சொல்லால்
எண்ணிய அனைத்தும் தரும் இவ்வுலகு //

இனிய சொல்லுக்கு ஏங்கும் உள்ளங்கள் தானே நிறைய இருக்கிறது.
இனிய சொல்லால் அனைவையும் மகிழ்ச்சி படுத்துவோம்.
நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இனிய சொல் பற்றிய குறள் விளக்கமும் இனிமை. பாராட்டுக்கள்,

Unknown சொன்னது…

கோமதி அரசு said...
"இனிய சொல்லுக்கு ஏங்கும் உள்ளங்கள் தானே நிறைய இருக்கிறது.
இனிய சொல்லால் அனைவையும் மகிழ்ச்சி படுத்துவோம். நன்றி

இனிய சொல்லால் அனைவையும் மகிழ்ச்சி படுத்தி நாமும் மகிழ்வோம். தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
இனிய சொல் பற்றிய குறள் விளக்கமும் இனிமை. பாராட்டுக்கள்

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

அபயாஅருணா சொன்னது…

நல்ல பகிர்வு .நன்றி .

Unknown சொன்னது…

அபயாஅருணா said...
//நல்ல பகிர்வு .நன்றி //

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவி்ற்கும் நன்றி

முற்றும் அறிந்த அதிரா சொன்னது…

செலக்ட் பண்ணிய குறள்களும்.. விளக்கமும் அருமையாக இருக்கு.

Unknown சொன்னது…

athira said...
//செலக்ட் பண்ணிய குறள்களும்.. விளக்கமும் அருமையாக இருக்கு//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.