திங்கள், 17 அக்டோபர், 2011

இறைவனை வணங்குவீர்



கற்றதால் கிடைத்த பலன்ஏதுமில்லை இறைவனின்
பாதங்களை வணங்கா விட்டால்                  பாமரன் குறள்

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்                                   திருக்குறள்  2


வேண்டுதல் வேண்டாமை இல்லா இறைவனடி வணங்குபவருக்கு
எப்போதும் துன்பம் இல்லை
பாமரன் குறள்

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல                                   திருக்குறள்  4


தனக்கிணை இல்லா இறைவனை வணங்குபவரல்லாது மற்றவருக்கு
மனக்கவலை மாற்றுவது கடினம்
பாமரன் குறள்

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால
மனக்கவலை மாற்றல் அரிது






திங்கள், 3 அக்டோபர், 2011

செய்த உதவியைப் பெரிதாக நினைப்பார்கள் பலன் தெரிந்தவர்கள்



ஒருவருக்கு ஒரு உதவி தேவை. மற்றவர் அந்த உதவியை  அவருக்குச் செய்து தருகிறார். அந்த உதவியைச் செய்lதவர் “நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன் என்னால் முடிந்ததைத்தானே செய்தேன்” என்று சொல்வார். ஆனால் அந்த உதவியைப் பெற்றவருக்குத்தான் தெரியும் அந்த உதவியானால் அவர் அடையக்கூடிய பலன். அந்த உதவியின் பலனை நன்கு அறிந்தவர் அவ்வுதவியைச் சிறியதாகக் கருதமாட்டார். அப்படி உதவியின் பலனை நன்கு அறிந்தவர் செய்யப்பட்ட உதவி  சிறியதாக இருந்தாலும், அதனைப் பனைமரமளவு பெரியதாகவே நினைப்பார்.


தினையளவே உதவி செய்தாலும் பனைமர அளவாகக்
கருதுவார் அதன் பலன் தெரிந்தவர்.


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்                      குறள் 104