திங்கள், 3 அக்டோபர், 2011

செய்த உதவியைப் பெரிதாக நினைப்பார்கள் பலன் தெரிந்தவர்கள்



ஒருவருக்கு ஒரு உதவி தேவை. மற்றவர் அந்த உதவியை  அவருக்குச் செய்து தருகிறார். அந்த உதவியைச் செய்lதவர் “நான் என்ன பெரிதாகச் செய்துவிட்டேன் என்னால் முடிந்ததைத்தானே செய்தேன்” என்று சொல்வார். ஆனால் அந்த உதவியைப் பெற்றவருக்குத்தான் தெரியும் அந்த உதவியானால் அவர் அடையக்கூடிய பலன். அந்த உதவியின் பலனை நன்கு அறிந்தவர் அவ்வுதவியைச் சிறியதாகக் கருதமாட்டார். அப்படி உதவியின் பலனை நன்கு அறிந்தவர் செய்யப்பட்ட உதவி  சிறியதாக இருந்தாலும், அதனைப் பனைமரமளவு பெரியதாகவே நினைப்பார்.


தினையளவே உதவி செய்தாலும் பனைமர அளவாகக்
கருதுவார் அதன் பலன் தெரிந்தவர்.


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்                      குறள் 104

6 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

To the discerning a millet of aid
is as big as a palm fruit

ஸாதிகா சொன்னது…

அழகிய விளக்கம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அந்த உதவியைப் பெற்றவருக்குத்தான் தெரியும் அந்த உதவியானால் அவர் அடையக்கூடிய பலன். அந்த உதவியின் பலனை நன்கு அறிந்தவர் அவ்வுதவியைச் சிறியதாகக் கருதமாட்டார். /

அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

Unknown சொன்னது…

Blogger ஸாதிகா said...

" அழகிய விளக்கம்"

தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

Blogger suryajeeva said...

To the discerning a millet of aid
is as big as a palm fruit

ஆங்கில வடிவத்தின் பதிவிற்கு நன்றி

Unknown சொன்னது…

Blogger இராஜராஜேஸ்வரி said...

. அந்த உதவியின் பலனை நன்கு அறிந்தவர் அவ்வுதவியைச் சிறியதாகக் கருதமாட்டார். /
அழகான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்

தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.