திங்கள், 9 செப்டம்பர், 2013

விதியில்லையெனில் கஷ்டப்பட்டு காத்தாலும் தங்காது


குறள் பால்; அறத்துப்பால்  குறள் இயல் ஊழியல் அதிகாரம் - ஊழ் 

குறள் எண்  376 முதல் 380 வரை


பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.                       குறள் # 376
வருந்திக் காத்தாலும் தங்காது விதியில்லையெனில் நாமே
வெளியே எடுத்துப்போட்டாலும் போகாது நமதாயின்.    பாமரன் பொருள்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது.     குறள் # 377
ஊழால் விதித்த விதிப்படியில்லாமல் கோடிப் பொருள்களை
சேர்த்தவருக்கு அவற்றை அனுபவிப்பது கடினம்.     பாமரன் பொருள்

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.      குறள் # 378
துறவு மேற்கொள்வர் நுகர் பொருளில்லாதவர் ஊழின்காரணமாய்
துன்பங்கள் கஷ்டப்படுத்தாமல் ஒழியுமென்றால்.,        பாமரன் பொருள்

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.           குறள் # 379
நல்லதுநடக்கும்போது நல்லதாகப் பார்ப்பவர் தீயன நடந்தால்
கலங்கி துன்பப் படுவது ஏனோ?                     பாமரன் பொருள்

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.     குறள்  # 380
விதியைவிட மிக்க வலிமையானவை எவை உள்ளன மற்றொன்றை ஆராய்ந்தாலும் அதுவே முன்வந்து நிற்கும்.         பாமரன் பொருள்


6 கருத்துகள்:

athira சொன்னது…

உண்மைதான் அழகிய குறள்கள்.. அழகிய விளக்கங்கள்.

விதியை அந்த ஆண்டவனால்கூட மாற்ற முடியாதாமே..

Viya Pathy சொன்னது…

Thank you for your visit. Thanks for giving your comment.

இளமதி சொன்னது…

வணக்கம் சகோதரரே!
விதியைப் பற்றி அருமையான விளக்கம்!

வாழ்ந்து அனுபவிக்கின்றோம் அததைத்தான் நாம்.
நொந்து கொள்கிறோம்.. சிந்திக்கத் தவறுகிறோம்!

நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

Viya Pathy சொன்னது…

இளமதி said...
வணக்கம் சகோதரரே!
விதியைப் பற்றி அருமையான விளக்கம்!
!...............................
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள்!

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

தியானா சொன்னது…

அருமையான குறள்கள் மற்றும் விளக்கங்கள் அய்யா..

Viya Pathy சொன்னது…

தியானா said...
//அருமையான குறள்கள் மற்றும் விளக்கங்கள் அய்யா.//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.