சனி, 7 செப்டம்பர், 2013

வருவதற்குரிய ஊழால் உண்டாகும் சோர்வில்லா முயற்சி
குறள் பால்; அறத்துப்பால்  குறள் இயல் ஊழியல் அதிகாரம் - ஊழ் 

குறள் எண்  371 முதல் 375 வரை

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி    குறள் # 371
வருவதற்குரிய ஊழால் உண்டாகும் சோர்வில்லா முயற்சி கைப்பொருள்
போவதற்கான விதியால் ஏற்படும் சோம்பல்.        பாமரன் பொருள்

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.         குறள் # 372
அறியாமையை உண்டாக்கும் இழப்பதற்கான ஊழ் அறிவைப் பெருக்கும்
ஆவதற்கான விதி இருந்தால்.    .        பாமரன் பொருள்

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.      குறள் @ 373
நுட்பமான நூல்கள் பல கற்றாலும் விதியின்படி தன்னுடைய
இயல்பான அறிவே மேலோங்கும்    .        பாமரன் பொருள்

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.     குறள் # 374
இருவகைப்பட்டது உலகத்து இயல்பு செல்வம் உடையவராதல் வேறு
அறிவுடையராதல் வேறு.                .        பாமரன் பொருள்

நல்லவை எல்லாந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.     குறள் # 375
விதியினால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் தீயவை
நல்லவை ஆதலும் உண்டு பொருளீட்டும் முயற்சியில்  பாமரன் பொருள்6 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

நல்ல பகிர்வுக்கு நன்றி.

Viya Pathy சொன்னது…

//கோமதி அரசு said...
நல்ல பகிர்வுக்கு நன்றி//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.

Viya Pathy சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்//.

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

athira சொன்னது…

குறளும் பாமரன் பொருளும் நன்றாக இருக்கு.. ஆனா சிலவேளை பொருளே எனக்குப் புரியுதில்லை..:) திரும்பத் திரும்பப் படித்துதெளிவாகிறேன்.. அவ்ளோ வீக்காக்கும்... நான் திருக்குறளில்:))

Viya Pathy சொன்னது…

athira said...
//குறளும் பாமரன் பொருளும் நன்றாக இருக்கு.. ஆனா சிலவேளை பொருளே எனக்குப் புரியுதில்லை..:) திரும்பத் திரும்பப் படித்துதெளிவாகிறேன்.. அவ்ளோ வீக்காக்கும்... நான் திருக்குறளில்:))//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
எல்லோருக்கும் புரியவேண்டும் என்பதற்காகவே பொருளை எளிதாக எழுத முயற்சிக்கிறேன். எந்தக் குறளுக்கு பொருள் புரியவில்லை என்றால் அதனை இன்னும் எளிமைப்படுத்துகிறேன் கருத்துக்கு நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.