செவ்வாய், 13 மார்ச், 2012

மனைவி நற்பண்புடையவளானால் வாழ்வில் இல்லாதது என்ன?


மனைவி நற்பண்புடையவளானால் வாழ்வில் இல்லாதது என்ன

இல்வாழ்வுக்கான நற்பண்பு உடையவளாகி கணவனின்
வசதிக்கேற்ப வாழ்பவளே நற்துணைவி              பாமரன் குறள்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை                  குறள் 51

குடும்பப்பாங்கு மனைவியிடம் இல்லையெனில் வாழ்க்கை
எவ்வளவு சிறப்புடையதாயினும் பயனில்லை            பாமரன் குறள்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.                            குறள் 52

மனைவி நற்பண்புடையவளானால் இல்லாதது என்ன அப்படி
இல்லையெனில் இருப்பதுதான் என்ன                   பாமரன் குறள்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை                         குறள் 53

4 கருத்துகள்:

athira சொன்னது…

மூன்றுமே அழகான குறள்கள்... சூப்பராக இருக்கு. நான் பெரிதாக திருக்குறள் படித்ததில்லை.

வியபதி சொன்னது…

தங்கள் வருகைக்கும், கருத்தை பதிவு செய்துள்ளமைக்கும் நன்றி

Without Investment Jobs Available சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
வியபதி சொன்னது…

உங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. கிட்டதட்ட எல்லா தொடர்களிலும் ஏதாவது ஒரு பாத்திரம் குடிப்பதுபோல காட்டுவது ஒரு வியாதியாகவே பரவி வருகிறது.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.