ஞாயிறு, 16 ஜூன், 2013

பொறாமை செல்வத்தை அழித்து விடும்.(உதவியாகக்)
கொடுப்பதில் பொறாமைப் படுபவன் குடும்பம் உணவும்
உடையும் இன்றிக் கெடும்.         பாமரன் பொருள்
கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்.        குறள் 166

பொறாமைப் படுபவனை திருமகள் பொறாமையுடன்
மூதேவிக்கு காட்டி விலகுவாள்.     பாமரன் பொருள்
அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்.      குறள்  167

பொறாமை எனும் தீமை செல்வத்தை அழித்து
நரகத்தில் தள்ளி விடும்.     பாமரன் பொருள்
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.        குறள் 168

பொறாமை கொண்டவன் உயர்வும், பொறாமை இல்லாதவன்
கெடுவதும் வியப்புக் குரியதே பாமரன் பொருள்
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்.    குறள் 169

பொறாமையில்லாதவர் தாழ்ந்தவரும் இல்லை, பொறாமைப் படுபவர்
புகழ்பெற்று உயர்ந்தோரும் இல்லை  பாமரன் பொருள்
அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்.   குறள்  170

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.