வியாழன், 20 ஜூன், 2013

செல்வம் குறையாதிருக்க வழி பிறர்குரிய பொருள் விரும்பாமையே

 
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்      குறள் # 176
அருள்விரும்பி அவ்வழியில் செல்பவன் பொருள்விரும்பி
பொல்லாதன செய்தால் கெடுவான்.      பாமரன் பொருள்

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.       குறள் # 177
கவர்வதால் கிட்டும்மேன்மை விரும்பவேண்டாம், கிடைக்கும்
பயன் நன்மையாவது அரிது           பாமரன் பொருள்


அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.    குறள்  # 178
செல்வம் குறையாதிருக்க வழி யாதெனில் விரும்பாமை
வேண்டும் பிறர்குரிய பொருள்.       பாமரன் பொருள்

அறன்அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.           குறள் # 179
அறம்தெரிந்து பிறன்பொருள் விரும்பாதஅறிவுடையவரின்
தகுதியறிந்து அவரிடம் சேரும் செல்வம்    பாமரன் பொருள்


இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.              குறள் # 180
பின்விளைவை எண்ணாமல் பிறன்பொருள் விரும்பினால் அழிவைத்தரும்
அப்பொருள்விரும்பாமை வெற்றி தரும்        பாமரன் பொருள்
 கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.