(புல்லாங்) குழலிசை
யாழிசை இனிது என்பர் தம் குழந்தைகள்
மழலையைக் கேட்காதவர்கள் பாமரன் பொருள்
குழலினிது யாழினிது என்பதம்
மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் குறள் 66
தந்தை குழந்தைகளுக்குச்
செய்யும் உதவி சபையில்
சிறந்தவராக இருக்கச்
செய்வது பாமரன் பொருள்
தந்தைமகற்கு ஆற்றும்
நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல் குறள் 67
தம்மைவிட குழந்தைகள்
அறிவுடையோர் என்பது உலகில்
எல்லா மக்களுக்கும்
இன்பம் தருவது பாமரன் பொருள்
தம்மின் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது --குறள் 68
பெற்ற நேரத்தைவிட அதிகம்
மகிழ்வாள் தன்மகனை
அறிவுடையோன் எனக்கேட்கும்
தாய் - பாமரன் பொருள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய் - குறள் 69
மகன் தந்தைக்குச்செய்யும் உதவி இவன்தந்தை
என்னதவம் செய்தானோ எனும் சொல் -பாமரன் பொருள்
மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி
இவன்தந்தை
என்நோற்றான் கொல் எனும்
சொல் - குறள் 70
4 கருத்துகள்:
எளிமையான விளக்கம் பாராட்டுகள்..
மதுமதி said...
//எளிமையான விளக்கம் பாராட்டுகள்//
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
தம்மைவிட குழந்தைகள் அறிவுடையோர் என்பது எல்லோருக்கும இன்பம் தருவது
nice..
இராஜராஜேஸ்வரி said...
//nice.//
தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.