சனி, 7 ஏப்ரல், 2012

மழலைக் கேட்பது செவிக்கு இன்பம்/

பெறுபவற்றுள் சிறந்தது ஏதுமில்லை அறிவுடைய

குழந்தைகள் தவிர வேறல்ல            பாமரன் பொருள்

 பெறுமவற்றுள் யாமஅறிவ தில்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற      குறள்  61


ஏழுபிறப்பிலும் தீமை வராது குற்றமற்ற
பண்புடைய குழந்தைகள் பெற்றால்        பாமரன் பொருள்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்  குறள்  62


நம்செல்வம் என்பது குழந்தைகளே அச்செல்வம்
தம்வினையால் வருவது ஆகும்             பாமரன் பொருள்

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்  குறள் 63


அமிர்தத்தையும் விடஇனியது தம்குழந்தை
சிறுபிஞ்சுகை துளாவிய கூழ்              பாமரன் பொருள்

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்,             குறள்  64


குழந்தைகளை தொட்டுத்தூக்குவது உடலுக்கின்பம் அவர்கள்
மழலைக் கேட்பது செவிக்கு இன்பம்/          பாமரன் பொருள்

மக்கள் மெய்தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு       குறள் 65

6 கருத்துகள்:

Unknown சொன்னது…

தமிழர் தம் குரலாம், குறள்- பேசும் தொகுப்பினை உருவாக்குவது, பாராட்டிற்குரிய முயற்சி வாழ்த்துகள்..

Unknown சொன்னது…

பாரத்... பாரதி... said...
//தமிழர் தம் குரலாம், குறள்-......//

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

சாதாரணமானவள் சொன்னது…

ரொம்ப நல்லா இருக்குங்க. . தொடருங்கள். வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

சாதாரணமானவள் said...
"ரொம்ப நல்லா இருக்குங்க. . தொடருங்கள். வாழ்த்துக்கள்''

உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி.

பெயரில்லா சொன்னது…

அருமையான பாமரன் கருத்துக்கள். நன்றி

Unknown சொன்னது…

seenuguru said...
அருமையான பாமரன் கருத்துக்கள்

தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.