பெண்ணைவிட பெருமையானவை எவை கற்பெனும் மனஉறுதி உள்ளது எனில். பாமரன் பொருள்
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின் குறள் -54
தெய்வம் தொழாவிடினும் கணவனை பெரிதும் மதிப்பவள்
வேண்டுவன வேண்டியபடி பெறுவாள் --பாமரன் பொருள் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை குறள் -55
தன்னைக் காத்து கணவனையும் காத்து பெருமைசேர்க்கும்
புகழைக்காப்பதில் உறுதியுள்ளவளே பெண் --பாமரன் பொருள் தற்காத்து தற்கொண்டான்பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விளாள் பெண் குறள் -56
சிறைபோன்ற காவல் என்ன செய்யும் பெண்கள்
மனஉறுதியால் காப்பதே சிறந்தது பாமரன் பொருள் சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை குறள் -57
கணவன் (தேவைகளைப்) பெற்றால் பெறுஞ்சிறப்பு பெறுவர் பெண்கள் வான்புகழ் கொண்டோர் உலகில் பாமரன் பொருள்
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெறுஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு குறள் -58
புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு இல்லை பழிப்பவர் முன் தலை நிமிர்ந்த நடை பாமரன் பொருள்
புகழ்புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை குறள் -59
மங்கலம் ஆகும் மனைவியின் நல்லொழுக்கம் மேலும்
அணிகலன் நல்ல குழந்தைகளே பாமரன் பொருள்
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட்பேறு குறள்-60
2 கருத்துகள்:
குறள் மூலம் ஓங்குக நம் குரல். உமது பனி தொடரட்டும் வாழ்த்துக்கள்
seenuguru said...
குறள் மூலம் ஓங்குக நம் குரல்
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.