நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது
அறவழியில் இல்வாழ்க்கை வாழ்வதானால் வேறுவழியில்
சென்று பெறப்போவது என்ன? பாமரன் குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய்ப் பெறுவ தெவன் குறள் 46
இயல்போடு இல்வாழ்க்கை வாழும் ஒருவன்
வாழமுயலும் எல்லோருள்ளும் சிறந்தவன். பாமரன் குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை குறள் 47
அறம்தவறா நடத்தையால் நல்வழிகாட்டும் நல்லறம்
துறவிகளின் தவத்தைப் போன்றதாகும் பாமரன் குறள்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து குறள் 48
அறம்எனச் சொல்லப்பட்டதே இல்வாழ்க்கை அதுவும்
பிறரால் பழிக்கப்படாமல் இருப்பது நல்லது பாமரன் குறள்
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்ப்ழிப்ப தில்லாயின் நன்று குறள் 49
உலகில் அறநெறியில் வாழ்பவன் வானுலகின்
தெய்வமாக மதிக்கப்படுவான். பாமரன் குறள்
வையத்தின் வழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் குறள் 50
4 கருத்துகள்:
நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது//
அருமையான திருக்குறள்.
கோமதி அரசு said...
//நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது// அருமையான திருக்குறள்.
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நல்ல தொகுப்பு.
athira said...
//நல்ல தொகுப்பு.//
தங்கள் வருகைக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.