வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அன்பும் அறனும் உடையதானால் இல்வாழ்வின் பண்பும் பயனும் அது


இல்லறத்தில் வாழ்பவன் பெற்றோர் மனைவி மக்கள் மூவர்க்கும்
நல்வழியில் நிற்கும் துணையாகும்                        பாமரன் குறள்
இல்வழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை                             குறள் 41

துறவியர்க்கும் வறியவர்க்கும் முதியோர்க்கும் இல்லறத்தில்
வாழ்வான் என்பவன் துணையாகும்                  பாமரன் குறள்
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.                           குறள் 42

அறிவாளர் வழிபாட்டுக்குரியோர் விருந்தினர் சுற்றத்தார் தான்எனும்
ஐவரையும் காப்பது கடமை                                பாமரன் குறள்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை                            குறள் 43

பழிக்குஅஞ்சி ஈட்டி பகிர்ந்துண்டு வாழ்வதாயின் வாழ்வில்
செல்வக்குறைவு எப்போதும் இல்லை           பாமரன் குறள்
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞ்சான்றும் இல்              குறள்  44

அன்பும் அறமும் உடையதாயின்  இல்வாழ்வின்
பண்பும் பயனும் அதுவே                   பாமரன் குறள்
அன்பும் அறனும் உடைத்தாயின்  இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது         குறள்  45           
 
அறவழியில் வாழ்க்கை நடத்துபவராயின் துறவறத்தில்
போய்ப் பெறப்போவது என்ன                       பாமரன் குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கைஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்                             குறள் 46

3 கருத்துகள்:

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

அருமை குறள்களும் கருத்துக்களும்..

Avainayagan சொன்னது…

athira said...
அருமை குறள்களும் கருத்துக்களு


உங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

Avainayagan சொன்னது…

தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. அத்துடன் தங்கள் வலைச்சரத்தில் இப்பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.