அன்பினை அடைக்கும்
தாழ்ப்பாள் உண்டோ அன்பர்
கண்ணீரே பலர் அறியச்
செதுய்விடும்.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும்
தாழ் ஆர்வலர்
புன்கண்ணீர் பூசல்
தரும் குறள் 71
அன்பில்லாதவர் எல்லாம்
தமதென்பர் அன்புடையவர்
உடலையும் பிறருக்குத்
தருவர்
அன்பிலார் எல்லாம்
தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர்
பிறர்க்கு குறள் 72
அன்போடு இணைந்த செயல்
என்பது ஆருயிர்க்கு
உடம்போடு உள்ள
தொடர்பு போன்றது
அன்போடு இயைந்த
வழக்கு என்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு குறள் 73
அன்புடன் அமைந்த
செயல் என்பது உலகில்
இன்புற்றவர் அடையும் சிறப்பு
அன்புற்று அமைந்த
வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும்
சிறப்பு. குறள் 74
அறத்திற்கே அன்பு துணை
என்பர் அறியாதவர்
அறமில்லாத தீமையை
எதிர்க்கவும் அதுவே துணை குறள் 75
அறத்திற்கே அன்பு
சார்பு என்பர் அறியார்
மறத்திற்கும் அஃதே
துணை.
2 கருத்துகள்:
சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரி said...
//சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.