ஞாயிறு, 20 மே, 2012

நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர் பெருமையே உலகில் உயர்ந்த்துநீரின்றி இல்லை உலக வாழ்க்கைஎனில் யாருக்கும்
மழையின்றி அமையாது ஓழுங்கு        பாமரன் பொருள் 
நீரின்றி அமையாது உலகுஎனின் யார்யார்க்கும்
வானின்று அமையாது ஓழுங்கு = குறள் 20


ஒழுக்கத்துடன் வாழ்ந்து துறவியானோர் பெருமை
அவர்களின் அறநூல்களால் உணரலாம்  பாமரன் பொருள்
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு      குறள் 21


துறவிகள் பெருமை அளந்து கூறினால் உலகில்
இறந்தோரை எண்ணிக் கூறுவது போன்றது  பாமரன் பொருள்
துறந்தார்  பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று      குறள் 22நன்மைதீமை வகைதெரிந்து துறவியானோர்
பெருமையே உலகில் உயர்ந்த்து      பாமரன் பொருள்
இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு        குறள் 23


அறிவுஎன்னும் அங்குசத்தால் ஐம்புலன்களை அடக்கும் துறவி
துறவறம் என்னும் நிலத்திற்கு நல்விதை     பாமரன் பொருள்
உரன்என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்பிற்குஓர் வித்து    குறள் 24


ஐம்புலன்அடக்கிய ஞானியர் வல்லமைக்கு வானவர் தலைவனான
இந்திரனே பொருத்தமான சான்று     பாமரன் பொருள்
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலும் கரி          குறள் 25

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.