மலர்மிசைஏகினான்
மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ்
வார் குறள் 3
பக்தர் நெஞ்சில் வசிக்கும் இறவனடி வணங்குபவர்
உலகில் நீண்டகாலம் வாழ்வர் ==== பாமரன் பொருள்
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு குறள் 5
அறியாமையும் பெருந்துன்பங்களும் வராது இறைவனின்
பொருளும் புகழும் புரிந்தவர்களுக்கு பாமரன் பொருள்
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ்
வார் குறள் 6
ஐம்புலன்களை அடக்கிய
இறைவனின் உண்மையான ஒழுக்க
நெறிபின்பற்றுபவர்
நெடுங்காலம் வாழ்வர். பாமரன் பொருள்
அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு
அல்லால்
பிறவாழி நீந்தல்
அரிது குறள் 8
அறக்கடவுளாம் இறைவனடி
வணங்குபவர் அல்லாதவருக்கு
பாவக்கடலை நீந்துவது
கடினம் பாமரன் பொருள்
கோளில் பொறியில் குணம்இலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. குறள் 9
செயலில்லா ஐம்புலன்கள்
பயனில்லாததுபோல் இறைவனின்
கால்களை
வணங்காத் தலையும் பாமரன் பொருள்
5 கருத்துகள்:
குறள்களும் விளக்கமும் அருமை.
athira said...
//குறள்களும் விளக்கமும் அருமை//
தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
நன்றி நண்பரே. அன்போடு நீங்கள் அளித்த விருதினை நன்றியோடு ஏற்றக்கொள்கிறேன்
அருமை சகோ நீங்களும் எங்கபக்கம் வந்து போகலாமே
தங்கள் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.