திங்கள், 26 மார்ச், 2012

புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு நிமிர்ந்த நடை இல்லை


பெண்ணைவிட பெருமையானவை எவை கற்பெனும் மனஉறுதி உள்ளது எனில்.         பாமரன் பொருள்  
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்     குறள் -54

தெய்வம் தொழாவிடினும் கணவனை பெரிதும் மதிப்பவள்
வேண்டுவன வேண்டியபடி பெறுவாள்  --பாமரன் பொருள்    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை             குறள் -55

தன்னைக் காத்து கணவனையும் காத்து பெருமைசேர்க்கும்
புகழைக்காப்பதில் உறுதியுள்ளவளே பெண் --பாமரன் பொருள்   தற்காத்து தற்கொண்டான்பேணித் தகைசான்ற
சொற்காத்து சோர்விளாள் பெண்           குறள் -56

சிறைபோன்ற காவல் என்ன செய்யும் பெண்கள்
மனஉறுதியால் காப்பதே சிறந்தது   பாமரன் பொருள்  சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்       நிறைகாக்கும் காப்பே தலை            குறள் -57

கணவன் (தேவைகளைப்) பெற்றால் பெறுஞ்சிறப்பு பெறுவர்         பெண்கள் வான்புகழ் கொண்டோர் உலகில்     பாமரன் பொருள்   
பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெறுஞ்சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு           குறள் -58

புகழ்வாய்ந்த வாழ்வு இல்லாதோர்க்கு இல்லை பழிப்பவர் முன் தலை நிமிர்ந்த நடை          பாமரன் பொருள்  
புகழ்புரிந்த இல் இல்லோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை                    குறள் -59

மங்கலம் ஆகும் மனைவியின் நல்லொழுக்கம் மேலும்
அணிகலன் நல்ல குழந்தைகளே         பாமரன் பொருள்  
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட்பேறு            குறள்-60




செவ்வாய், 13 மார்ச், 2012

மனைவி நற்பண்புடையவளானால் வாழ்வில் இல்லாதது என்ன?


மனைவி நற்பண்புடையவளானால் வாழ்வில் இல்லாதது என்ன

இல்வாழ்வுக்கான நற்பண்பு உடையவளாகி கணவனின்
வசதிக்கேற்ப வாழ்பவளே நற்துணைவி              பாமரன் குறள்
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை                  குறள் 51

குடும்பப்பாங்கு மனைவியிடம் இல்லையெனில் வாழ்க்கை
எவ்வளவு சிறப்புடையதாயினும் பயனில்லை            பாமரன் குறள்
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.                            குறள் 52

மனைவி நற்பண்புடையவளானால் இல்லாதது என்ன அப்படி
இல்லையெனில் இருப்பதுதான் என்ன                   பாமரன் குறள்
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை                         குறள் 53

வெள்ளி, 2 மார்ச், 2012

நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது


நல்லறம் துறவிகளின் தவத்தைப் போன்றது


அறவழியில் இல்வாழ்க்கை வாழ்வதானால் வேறுவழியில்
சென்று பெறப்போவது என்ன?                      பாமரன் குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய்ப் பெறுவ தெவன்                         குறள் 46

இயல்போடு இல்வாழ்க்கை வாழும் ஒருவன்
வாழமுயலும் எல்லோருள்ளும் சிறந்தவன்.          பாமரன் குறள்
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை                     குறள் 47

அறம்தவறா நடத்தையால் நல்வழிகாட்டும் நல்லறம்
துறவிகளின் தவத்தைப் போன்றதாகும்               பாமரன் குறள்
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து                   குறள் 48

அறம்எனச் சொல்லப்பட்டதே இல்வாழ்க்கை அதுவும்
பிறரால் பழிக்கப்படாமல் இருப்பது நல்லது            பாமரன் குறள்
அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்ப்ழிப்ப தில்லாயின் நன்று                        குறள் 49

உலகில் அறநெறியில் வாழ்பவன் வானுலகின்
தெய்வமாக மதிக்கப்படுவான்.                        பாமரன் குறள்
வையத்தின் வழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்                         குறள் 50  

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

அன்பும் அறனும் உடையதானால் இல்வாழ்வின் பண்பும் பயனும் அது


இல்லறத்தில் வாழ்பவன் பெற்றோர் மனைவி மக்கள் மூவர்க்கும்
நல்வழியில் நிற்கும் துணையாகும்                        பாமரன் குறள்
இல்வழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்ஆற்றின் நின்ற துணை                             குறள் 41

துறவியர்க்கும் வறியவர்க்கும் முதியோர்க்கும் இல்லறத்தில்
வாழ்வான் என்பவன் துணையாகும்                  பாமரன் குறள்
துறந்தார்க்கும் துவ்வாத வர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.                           குறள் 42

அறிவாளர் வழிபாட்டுக்குரியோர் விருந்தினர் சுற்றத்தார் தான்எனும்
ஐவரையும் காப்பது கடமை                                பாமரன் குறள்
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை                            குறள் 43

பழிக்குஅஞ்சி ஈட்டி பகிர்ந்துண்டு வாழ்வதாயின் வாழ்வில்
செல்வக்குறைவு எப்போதும் இல்லை           பாமரன் குறள்
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞ்சான்றும் இல்              குறள்  44

அன்பும் அறமும் உடையதாயின்  இல்வாழ்வின்
பண்பும் பயனும் அதுவே                   பாமரன் குறள்
அன்பும் அறனும் உடைத்தாயின்  இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது         குறள்  45           
 
அறவழியில் வாழ்க்கை நடத்துபவராயின் துறவறத்தில்
போய்ப் பெறப்போவது என்ன                       பாமரன் குறள்
அறத்தாற்றின் இல்வாழ்க்கைஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்                             குறள் 46

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

அறவழியில் வருவதே இன்பம்


முதுமையில் செய்யலாமென எண்ணாதுஅறம் செய்க அதுவே
இறுதிக் காலத்தில் துணையாகும்        பாமரன் குறள்
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை               குறள் 36

அறத்தின் பயன் இதுவென கூறவேண்டாம் பல்லக்கில்
பயணிப்பவன் தூக்குபவன் இடையில்                    பாமரன் குறள்
அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை                   குறள் 37

நாள் தவறாமல் அறம் செய்தால் அதுவே
பிறவியைத்  தடுக்கும் கல்                             பாமரன் குறள்
வீழ்நாள் படாஅமை  நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள்  வழியடைக்கும் கல்                           குறள் 38

அறவழியில் வருவதே இன்பம் வேறுவழி வருபவை
இன்பமுமில்லை புகழுமில்லை                பாமரன்   குறள்     அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்
புறத்த புகழும் இல                                     குறள்   39    

செய்யவேண்டியவை எல்லாம் அறனே ஒருவருக்கு
செய்யக்கூடாதவை பழிதரும் பாவச்செயல்         பாமரன் குறள்
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி                            குறள் 40

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

சிறப்பையும், செல்வத்தையும் தரும் அறம்



சிறப்பைத்தரும் செல்வமும் தரும் அறத்தைவிட
சிறந்தது ஏதும் இல்லை                             பாமரன் குறள்         

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு                                குறள் 31

அறத்தைவிட சிறந்த சக்தியும் இல்லை அதனை
மறப்பதற்கு சமமான கேடும் இல்லை                 பாமரன் குறள்                     

அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்குஇல்லை கேடு                          குறள்  32  

மனதளவில் குற்றமில்லாமல் இருப்பதே அறமாகும்
மற்றவையோ வெறும் ஆரவாரங்களே                பாமரன் குறள்                        

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற                                           குறள் 34

பொறாமை பேராசை கோபம் கடுஞ்சொல் இந்நான்கும்
iஇல்லாது வாழ்வதே அறமாகும்                       பாமரன் குறள்   

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்                                  குறள் 35                    


சனி, 14 ஜனவரி, 2012

செய்ய வேண்டியவை செய்யாததால் கேடு வரும்


செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமை யாலும் கெடும்                குறள்  466

செய்யக் கூடாதது செய்ய கெடும் செய்ய வேண்டியவை
செய்யாத தாலும் கெடும்                     பாமரன் குறள்


அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல்
நல் வாழ்த்துக்கள்

என் வலைப்பதிவை ஆரம்பித்து ஒருவருடத்துக்கு மேலாகியும் பலரது பார்வையில் படாமலே இருந்துவந்தது. சிலமாதங்கள் முன்பு தான் ஒரு நண்பர் மூலமாக வலைப்பதிவு திரட்டிகள் பற்றி கேள்விப் பட்டேன். அவற்றில் பதிவு செய்த சில மாதங்களிலேயே ஆயிரம் பேருக்குமேல் என் எழுத்துக்களைப் படித்திருக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

வலைப்பதிவைப் படித்துச் செல்லும் சக பதிவர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் ஊக்குவிப்பும் என்னை மேலும் மேலும் எழுதத்தூண்டுகின்றன. என் எழுத்துக்களைப் படித்தவர்கள், பின்னூட்டமிட்டவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். எப்பொழுதும் உங்கள் கருத்துக் களையும் ஆலோசனைகளையும் பெரிதும் மதிக்கிறேன்,

 

நன்றி   நன்றி  நன்றி


இப்படிக்கு
வியபதி, அவை நாயகன்

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

துறவியர் பெருமை


சுவை வெளிச்சம் (தொடு)உணர்வு ஓசை வாசனை இவ்வைந்தின்
வகைதெரிந்த துறவியர் பின்னே உலகம்       பாமரன் குறள்

சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு                         குறள் 27
                         
மெய்ப்பொருள் அறிந்த துறவியர் பெருமை உலகில்
அவர்களின் நூல்கள் காட்டும்                       பாமரன் குறள்

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்                        குறள் 28

பண்புகள் நிறைந்த துறவியரின் கோபம்
கணநேரமும் நிலைத்து இருக்காது                   பாமரன் குறள்

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல்  அரிது                             குறள் 29