சுவை வெளிச்சம் (தொடு)உணர்வு ஓசை வாசனை இவ்வைந்தின்
வகைதெரிந்த துறவியர் பின்னே உலகம் பாமரன் குறள்
சுவைஒளி ஊறுஓசை நாற்றம் என்ற ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு குறள் 27
மெய்ப்பொருள் அறிந்த துறவியர் பெருமை உலகில்
அவர்களின் நூல்கள் காட்டும் பாமரன் குறள்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும் குறள் 28
பண்புகள் நிறைந்த துறவியரின் கோபம்
கணநேரமும் நிலைத்து இருக்காது பாமரன் குறள்
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது குறள் 29