குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: துறவறவியல். அதிகாரம்: அவாவறுத்த
அஞ்சுவ தோரும் அறனே
ஒருவனை
வஞ்சிப்ப தோரும்
அவா குறள் # 366.
ஆசைக்கு அஞ்சிவாழ்வது
அறம். ஒருவனை
வஞ்சித்துக்
கெடுப்பது ஆசையே பாமரன் பொருள்
அவாவினை ஆற்ற
அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான்
வரும். குறள் # 367
ஆசையினை மழுவதும்
ஒழித்தால் கெடாமல் வாழ்வதற்குரிய செயல்
தான் விரும்பும்
வழியில் உண்டாகும். பாமரன் பொருள்
அவாஇல்லார்க்கு
இல்லாகும் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல்
வரும். குறள் # 368
ஆசை இல்லாதவருக்கு
துன்பம் இல்லாது போகும் ஆசைஇருந்தால்
துன்பங்கள் மேலும்
மேலும் வரும். பாமரன் பொருள்
இன்பம் இடையறா
தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங்
கெடின்.. குறள் # 369
இன்பம் இடைவிடாமல்
இவ்வுலகில் வரும் ஆசையென்னும்
துன்பங்களுள்
பெருந்துன்பம் ஒழிந்தால் பாமரன் பொருள்
ஆரா இயற்கை
அவாநீப்பின் அந்திலையே
பேரா இயற்கை
தரும். குறள் # 370
நிறைவுபெறாத
இயல்பிலான ஆசையை நீங்கினால் அந்தநிலையே
மாறா இயல்புடைய
இன்பத்தைத் தரும்