சனி, 1 பிப்ரவரி, 2014

செய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; தெரிந்து செயல்வகை
குறள் 461 முதல் 470 வரை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்நு செயல்       குறள் # 461
செலவையும் வரும் வருவாயையும் அதன்வழிவரும்
லாபத்தையும் ஆராய்ந்து செயலைச் செய்க.        பாமரன் பொருள்

தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதுஒன்றும் இல்  குறள் # 462
தேர்ந்தெடுத்த நண்பர்களுடன் ஆராய்ந்து யோசித்து செய்பவர்களுக்கு
செய்யமுடியாத செயல் ஒன்று இல்லை         பாமரன் பொருள்

ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்     குறள் #463
லாபம் கிடைக்குமென எண்ணி முதலைஇழக்கும் செயல்களை
ஆதரிக்கமாட்டார்கள் அறிவுடையோர்.        பாமரன் பொருள்

தெளிவுஇல் அதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்       குறள் # 464
என்னவாகும்எனும் தெளிவில்லா செயலை துவங்கமாட்டார்கள் இழிவான
நிலைக்கு பயப்படு பவர்கள்          பாமரன் பொருள்

வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு     குறள் # 465
செயலின் வகைகளை ஆராயாமல் செய்யத் தொடங்குதல் பகைவரை
வலிமையாக நிலைபெறச் செய்யும் ஒரு வழி.        பாமரன் பொருள்

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்   குறள் #466
செய்யக்கூடாதவை செய்வதால் கெடுவான் செய்யவேண்டியவை
செய்யாததாலும் கெட்டுப் போவான்.      பாமரன் பொருள்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.      குறள் # 667
யோசித்து செயலில் இறங்குக துவங்கியபிறகு
யோசிப்போம் என்பது குற்றமாகும்..        பாமரன் பொருள்

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்   குறள் # 468
முறையாக செய்யப்படாது முயற்சித்த காரியம் பலர்முயன்று
காத்த போதிலும் கெட்டுப் போகும்         பாமரன் பொருள்

நன்றுஆற்றல் உள்ளும் தவறுஉண்டு அவர்அவர்
பண்புஅறிந்து ஆற்றாக் கடை    குறள் #469
நன்மை செய்வதிலும் தவறு உண்டு அவரவர்களுடைய
பண்பை அறிந்து பொருத்தமாக செய்யாவிட்டால்.      பாமரன் பொருள்

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு.    குறள் # 470
உலகுஇகழாதவற்றை யோசித்துச் செய்யவேண்டும். தம்நிலையோடு

பொருந்தாததை ஏற்றுக்கொள்ளாது உலகம்.       பாமரன் பொருள்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தலைப்பும் அருமை... விளக்கங்களும் அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

Viya Pathy சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
தலைப்பும் அருமை... விளக்கங்களும் அருமை ஐயா//

தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.