சனி, 18 ஜனவரி, 2014

நல்லஇனத்தைவிட சிறந்த துணை இல்லை

பொருட்பால்
அரசியல்
அதிகாரம் : சிற்றினஞ்சேராமை

குறள் 356 முதல் 360 வரை

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   குறள் # 456
மனந்தூய்மையானவர்க்கு எஞ்சுவது புகழ்போன்ற நன்மை இனந்தூய்மையானவர்க்கு
நன்றாகாத செயல் ஏதும் இல்லை        பாமரன் பொருள்

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   குறள் # 457
மனநலம் உயிர்களுக்கு மேன்மையாகும் இனநலம்
எல்லாப் புகழையும் தரும்.      பாமரன் பொருள்

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு     
இனநலம் ஏமாப் புடைத்து.  குறள் # 458
மனநலம் நன்றாக அமையப்பெற்றவராயினும் சான்றோருக்கு
இனத்தின் நன்மை பாதுகாப்பாக அமையும்.      பாமரன் பொருள்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து  குறள் # 459
மனத்தின் நன்மையால் மறுமை இன்பமுடையதாகும் அதுவும்
இனநலத்தால் மேலும் சிறப்புடையதாகும்        பாமரன் பொருள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்     குறள் # 460
நல்லஇனத்தைவிட சிறந்த துணையுமில்லை.தீய இனத்தைவிட
துன்பம் தரும்பகையும் இல்லை          பாமரன் பொருள்


7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்து விளக்கமும் அருமை... 458 மிகவும் சிறப்பான குறள்...

Viya Pathy சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அனைத்து விளக்கமும் அருமை... 458 மிகவும் சிறப்பான குறள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இன நலம் பற்றி அருமையான குறட்பாக்களின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

asha bhosle athira சொன்னது…

தேர்ந்தெடுத்த குறள்கள் அருமை. விளக்கமும் இருப்பதால்தான் எனக்கு புரியுது:).

Viya Pathy சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
இன நலம் பற்றி அருமையான குறட்பாக்களின் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.//

தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.

Viya Pathy சொன்னது…

asha bhosle athira said...
//தேர்ந்தெடுத்த குறள்கள் அருமை. விளக்கமும் இருப்பதால்தான் எனக்கு புரியுது:)//

.தங்களுடைய வருகைக்கு நன்றி. (சில குறள் களுக்கு பல அறிஞர்பெருமக்களின் பொருளுரைகளைப் படித்துதான் நானும் புரிந்து கொள்கிறேன்) நன்றி

Mathu S சொன்னது…

உலகப் பொதுமறை இனம் என்று குறிப்பிட்டிருப்பது ஆச்சர்யம்...
நண்பர்களுடன் பேச வேண்டிய குரள்
www.malartharu.org

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.