வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை

                                                             பொருட்பால்
        அரசியல்
அதிகாரம்; வலியறிதல்
குறள் 471 முதல் 480 வரை



வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்    குறள் # 471
செயலின்வலிமையும் தனதுவலிமையும் பகைவரின் வலிமையும்இருவரது
துணையானவரின் வலிமையும் ஆராய்ந்து செய்க.      பாமரன் பொருள்

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்கு செல்லாதது இல்     குறள் # 472.
தம்மால் முடியும்செயல் அறிந்து அதைச்செய்வதற்கான வழியை சிந்தித்து
முயல்பவருக்கு முடியாதது ஏதுமில்லை                    jqபாமரன் பொருள்

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.    குறள் # 473
தன்னுடைய ஆற்றலை அறியாமல் ஆர்வத்தினால் தொடங்கி
இடையில் முடிக்க முடியாது கெட்டவர் பலர்.      பாமரன் பொருள்

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.   குறள் # 474
மற்றவர்களோடு ஒத்துப்போகாமல் தன்வலிமையையும் அறியாமல் தன்னைப்
பெரிதாக எண்ணுபவன் விரைவில் கெடுவான்.       பாமரன் பொருள்

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின் குறள் # 475
மயில்தோகையேயானாலும் வண்டியின் அச்சு முறியும் அதனை
அளவிற்கு அதிகமாக வண்டியில் ஏற்றினால்.               பாமரன் பொருள்

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்     குறள் # 476 
மரத்தின் கிளைநுனியில் ஏறியவர் அதையும்தாண்டி செல்லமுயன்றால்
அம்முயற்சி அவர் உயிருக்கு முடிவாகி விடும்        பாமரன் பொருள்

ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.     குறள் # 477
வருவாயின் அளவையறிந்து தருக, அதுவே பொருளைக்
காத்துக்கொண்டு தரும் வழியாகும்.           பாமரன் பொருள்

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.       குறள் #478
வருவாய் குறைவாக இருந்தாலும் தீங்கு இல்லை
செலவு அதிகமாகாமல் இருந்தால்.           பாமரன் பொருள்

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பொருளின் அளவறிந்து வாழாதவனின் வாழ்க்கை வளமானதாகத் தோன்றி
இல்லாமல் அழிந்து விடும்                           பாமரன் பொருள்

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை 
வளவரை வல்லைக் கெடும்   குறள் # 480
பொருள் உள்ள அளவை ஆராயாது செய்யும் உதவிகளால்

செல்வத்தின் அளவு விரைவில் குறையும்.            பாமரன் பொருள்    

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல விளக்கம் ஐயா... நன்றி...

எனக்கு மிகவும் பிடித்த அதிகாரங்களில் இதுவும் ஒன்று... தொழிலாளர்கள் தினம் பற்றி ஒரு பதிவு வித்தியாசமாக இட வேண்டும் என்று நினைத்தேன்... தனது மகன் மேல் நம்பிக்கை இல்லாத பல பெற்றோர்களையும் நண்பர்கள் சொன்னதின் மூலம் அறியப் பெற்றேன்... நண்பர்களின் வீட்டிலும் சில உரையாடல்களை நேரில் கேட்டும் உள்ளேன்... எனது சொந்த அனுபவமும் உண்டு...

விடிந்தால் தொழிலாளர்கள் தினம்... நான்கு மணி நேரத்தில் எழுதிய பகிர்வு இதோ : (தங்களின் கருத்துரைக்காக)

http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Pain-Gain.html

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//நல்ல விளக்கம் ஐயா... நன்றி.// தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. இதே குறள்களுக்கு உங்கள் விளக்கம் நன்றாக அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
//சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!//
நேரம் ஒதுக்கி இவற்றைப் படித்து உங்கள் கருத்தைப் பதிவிட்டுள்ளமைக்கு நன்றிகள். பாராட்டுக்களுக்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.