வியாழன், 12 மார்ச், 2015

பேச்சில் தவறு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்


பொருட்பால்   அமைச்சியல்    சொல்வன்மை   குறள் 641 முதல் 650 வரை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.      குறள் 641
நாவன்மை ஒருவகைச் செல்வம் அந்த தனிச்சிறப்புடைய நாநலம்
எந்த நலங்களிலும் அடங்குவது அன்று         பாமரன் பொருள்

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்
காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.      குறள் # 642
நன்மையும் கேடும் சொல்லால் வருவதால்
பேச்சில் தவறு வராமல் காத்துக்கொள்ள வேண்டும். பாமரன் பொருள்


கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.          குறள் # 643
கேட்டவர் மனம்கவரும் வண்ணமும் கேளாதவரும்
கேட்கவிரும்புவதாகவும் கூறுவது சொல்லாற்றல்.   பாமரன் பொருள்

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.        குறள் # 644
சொல்லின் வலிமையறிந்து சொல்லைச் சொல்லவேண்டும் அறனும்
பொருளும் சொல்வன்மையைவிட சிறந்தது இல்லை.   பாமரன் பொருள்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.       குறள் # 645.
சொல்லுக சொல்லை வேறொரு சொல் அச்சொல்லைவிட
சிறந்த சொல் இல்லையென அறிந்து.         பாமரன் பொருள்

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.         குறள் # 646
கேட்க விரும்பும்படி சொல்வதும் பிறர்சொல்லின் பயன்தெரிந்துகொள்வதும்
மாண்புடைய குற்றமற்றவரின் குறிக்கோள்.      பாமரன் பொருள்

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.     குறள் # 647
சொல்வன்மை உள்ளவனை சோர்வில்லாதவனை அஞ்சாமல் உள்ளவனை
பேச்சில் வெல்வது யாருக்கும் இயலாது.    பாமரன் பொருள்

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.      குறள் # 648
விரைந்து ஏற்கும் உலகம் கோர்வையாக இனிமையாக
சொல்லும் வல்லமை பெற்றிருந்தால்.     பாமரன் பொருள்

பலசொல்லிக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.       குறள் # 649
பலசொற்களைப் பேசவிரும்புவார்கள் குற்றமில்லாத
சிலசொற்களை சொல்லத் தெரியாதவர்கள்.     பாமரன் பொருள்

இணருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.         குறள் # 650
கொத்தாக மலர்ந்தும் மணக்காத மலர் போன்றவர்கள் தான்கற்றதை
பிறர் உணரும்படி விளக்கிச் சொல்ல முடியாதவர்கள்.   பாமரன் பொருள்


7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... அருமை ஐயா...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அப்படிச் சொல்லுங்க...!

http://dindiguldhanabalan.blogspot.com/2012/08/Power-of-Word.html

Unknown சொன்னது…

ண்டுக்கல் தனபாலன் சொன்னது…
்//அருமை... அருமை ஐயா//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி

kingraj சொன்னது…

அருமையான விளக்கங்கள்.பாமரன்பொருள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
அருமை
தம 2

Unknown சொன்னது…

King Raj சொன்னது…
அருமையான விளக்கங்கள்.பாமரன்பொருள்.

உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

Unknown சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
அருமை அருமை

உங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.