சனி, 29 நவம்பர், 2014

நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும்




பொருட்பால்   அரசியல்    ஊக்கம் உடைமை.   குறள்   591 -  600

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.         குறள்  591
ஊக்கம் உடையவரே ஒன்றை உடையவர். ஊக்கம் இல்லாதவர்
வேறு எல்லாம் உடையவராயினும் உடையவர் ஆவாரோ? பாமரன் பொருள்

உள்ளம் உடைமை உடைமை பொருள்உடைமை
நில்லாது நீங்கி விடும்.        குறள் # 592
ஊக்கம் உடைமையே ஒன்றைப் பெற்றிருப்பது. பிற பொருள் உடைமை
நிலை பெற்று நில்லாது நீங்கிவிடும்.          பாமரன் பொருள்


ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்.       குறள் # 593
செல்வத்தை இழந்தோம் என்று கலங்கமாட்டார் ஊக்கத்தை
உறுதியான கைப்பொருளாக உடையவர்.       பாமரன் பொருள்

ஆக்கம் அதர்வினாய்ச் செய்யும் அசைவுஇலா
ஊக்கம் உடையான் உழை.    குறள் # 594
செல்வம் தானே வந்து சேரும். சோர்வு இல்லாத
ஊக்கம் உள்ளவர் இடத்திற்கு.      பாமரன் பொருள்.

வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.         குறள் # 595
நீரின் உயரமே இருக்கும் தாமரைத்தண்டின் நீளம். மனிதரின்
ஊக்கத்தின் அளவே அவருடைய உயர்வு.     பாமரன் பொருள்

உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல் மற்றுஅது
தள்ளினும் தள்ளாமை நன்று.    குறள் # 596
நினைப்பது எல்லாம் உயர்வானதாக இருக்கட்டும் அது
கைகூடாவிட்டாலும் அப்படி நினைப்பதை விடக்கூடாது.  பாமரன் பொருள்


சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு.    குறள் # 597
அழிவு வந்தாலும் தளரமாட்டார்கள் ஊக்கமுடையவர் உடல்முழுதும் அம்புகளால் புண்பட்டாலும் யானை தளராது இருப்பது போல. பாமரன் பொருள்.

உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு.     குறள் # 598
ஊக்கம் இல்லாதவர் அடையமாட்டார் உலகில்
வள்ளல் நான் எனும் பெருமையை.   பாமரன் பொருள்

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.     குறள் #   599
பெரிய உடலையும் கூரான தந்தத்தையும் உடையதாயினும் யானை
ஊக்கமுள்ள புலி தாக்கினால் அஞ்சும்.   பாமரன் பொருள்

உரம்ஒருவற்கு உள்ள வெறுக்கைஅஃது இல்லார்
மரமக்கள் ஆதலே வேறு.       குறள் # 600
ஒருவனுக்கு வலிமை ஊக்கமிகுதியே, அவ்வூக்கமில்லாதவர்
மரங்களே மக்களைப் போல இருப்பதே வேறுபாடு.   பாமரன் பொருள்

4 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

உயர்வானதையே நினைப்போம்
நன்றி நண்பரே
தம 1

Avainayagan சொன்னது…

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…
""உயர்வானதையே நினைப்போம்
நன்றி நண்பரே""

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

பிலஹரி:) ) அதிரா சொன்னது…

நினைப்பது எல்லாம் உயர்வானதாயிருக்கட்டும்... உண்மைதான் நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, அதுதான் நடக்கும்..

Avainayagan சொன்னது…

athira சொன்னது…
நினைப்பது எல்லாம் உயர்வானதாயிருக்கட்டும்... உண்மைதான் நாம் எதை அதிகம் விரும்புகிறோமோ, அதுதான் நடக்கும்""

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.