பொருட்பால் அரசியல் கண்ணோட்டம் குறள் 571 முதல் 580 வரை
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு
குறள் # 571
கண்ணோட்டம் என்னும் அழியாப் பேரழகு இருப்பதால்தான்
இவ்வுலகம் அழியாமல் இருக்கிறது.
பாமரன் பொருள்
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை.
குறள் # 572
பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்.
குறள் # 573
ராகம் பாடலுக்குப் பொருந்தவில்லை என்றால் பயனில்லை.
கண்ணோட்டம் இல்லையெனில் கண்ணால் என்ன பயன் பாமரன் பொருள்
உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்.
குறள் # 574
உள்ளதைப் போலதோன்றுவதைத் தவிர முகத்தில்
வேறுபயன் இல்லை தக்க அளவில் கண்ணோட்டம் இல்லாத
கண். பாமரன் பொருள்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்
குறள் # 575
கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டம் எனும் பண்பே அதுஇல்லையெனில்
வெறும் புண் என்றே சொல்வர் . பாமரன் பொருள்
மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர் குறள்
# 576
மண்ணோடிருந்தும் அசையா மரத்தைப் போன்றவர் கண்ணோடு பொருந்தி
இருந்தும் கண்ணோட்டம்
இல்லாதவர். பாமரன் பொருள்
கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்
குறள் # 577
கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவரே கண்ணுடைய மக்கள்
கண்ணோட்டம் இல்லாமல் இருப்பதும் இல்லை. . பாமரன் பொருள்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு.
குறள் # 578
தம்வேலை கெடாது கண்ணொட்டம் உடையவராக இருக்க வல்லவருக்கு
இவ்வுலகம் உரிமை உள்ளது.
. பாமரன் பொருள்
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
குறள் # 579
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு
பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது
. பாமரன் பொருள்
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். குறள்
# 580
விஷத்தைத் தருகிறார் என தெரிந்தும் அதை உண்டு அவருடன் பழகுவர்
விரும்பத் தகுந்த நாகரிகத்தை விரும்புபவர் பாமரன் பொருள்
4 கருத்துகள்:
கண்ணோட்டம் பற்றிய குறள் பகிர்வுகள். அருமை..!
இராஜராஜேஸ்வரி சொன்னது…
கண்ணோட்டம் பற்றிய குறள் பகிர்வுகள். அருமை..
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
அருமை நண்பரே
நன்றி
ரந்தை ஜெயக்குமார் சொன்னது…
அருமை நண்பரே
நன்றி''
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துப் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.