பொருட்பால் -
அரசியல் -
வெருவந்தசெய்யாமை
குறள் 561 முதல 570 வரை
தக்காங்கு
நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு
ஒறுப்பது வேந்து குறள் # 561
குற்றத்தை
நடுநிலையோடு ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தைச் செய்யாதபடி
குற்றத்திற்கு
ஏற்ப தண்டனை தருவதே நல்ல அரசு. பாமரன் பொருள்
கடிதோச்சி
மெல்ல எறிகநெடிதாக்கம்
நீங்காமை
வேண்டு பவர் குறள் # 562
கடுமையாக
தண்டிப்பதுபோல தொடங்கி மென்மையாக தண்டிப்பீர் நெடுங்காலம்
வெருவந்த
செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம்
ஒல்லைக் கெடும் குறள் # 563
மக்கள்
அஞ்சும்படி கொடுமைகள் செய்யும் கொடுங்கோல் ஆட்சியானால்
உறுதியாக
விரைவில் அழியும். பாமரன் பொருள்
இறைகடியன்
என்றுரைக்கும் இன்னாச் சொல்வேந்தன்
உறைகடுகி
ஒல்லைக் கெடும் குறள் # 564
ஆள்பவர்
கொடியவர் என்று மக்களால் சொல்லப் படும்கொடிய அரசு
ஆயுள்
குறைந்து விரைவில் அழியும். பாமரன் பொருள்
அருஞ்செவ்வி
இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஏய்கண்
டன்னது உடைத்து குறள் # 565
எளிதில்
காணமுடியாத கடுகடுத்த முகத்தை உடையவரின் பெருஞ்செல்வம்
பேய்
காத்திருப்பது போன்றது ஆகும். பாமரன் பொருள்
கடுஞ்சொல்லன்
கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி
ஆங்கே கெடும் குறள் # 566
கடுஞ்சொல்
பேசுபவனாக கருணையில்லாதவராக இருந்தால் வளமான ஆட்சி
நீடிக்காமல்
விரைவில் அழியும். பாமரன் பொருள்
கடுமொழியும்
கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண்
தேய்க்கும் அரம். குறள் # 567
கடுஞ்சொல்லும்
முறையற்ற தண்டனையும் ஆள்பவரின்
பகைவரை
வெல்லும் வலிமையைக் குறைக்கும் கருவி..
பாமரன் பொருள்
இனத்தாற்றி
எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற்
சிறுகும் திரு. குறள் @ 568
உடனுள்ளவர்களுடன்
கலந்துஎண்ணாத ஆள்பவர் சினம் கொண்டு
சீறினால்
செல்வம் நாளும் குறையும். பாமரன் பொருள்
செருவந்த
போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து
வெய்து கெடும் குறள் # 569
போர்வரும்போது
தேவையான பாதுகாப்பைச் செய்துகொள்ளா ஆட்சியர்
அஞ்சி
அழிந்து போவார். பாமரன் பொருள்
கல்லார்ப்
பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை
நிலக்குப் பொறை குறள் # 570
கல்லாதவர்களைத்
துணையாகக் கொள்ளும் கொடுங்கோல் ஆட்சியர்
நிலத்துக்குப்
பெருஞ் சுமை. பாமரன் பொருள்
4 கருத்துகள்:
நன்றி நண்பரே
Than gal varugaykkum padhivirkkum nandri
உண்மையேதான்..
athira சொன்னது…
''உண்மையேதான்.''
தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துப் பதிவிற்கும் நன்றி.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.