புதன், 16 அக்டோபர், 2013

பயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.


பயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.


பொருட்பால்
அரசியல்
அதிகாரம்; அறிவுடைமை
எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.    குறள் # 426.
உலகம் எவ்வாறு நடந்துகொள்கிறதோ, உலகத்தோடு
அவ்வழியில் நடப்பதுதான் அறிவு,              பாமரன் பொருள்

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதுஅறி கல்லா தவர்.      குறள் # 427.
அறிவுடையவர் நாளைவர இருப்பதை எண்ணி அறியவல்லவர், அறிவில்லாதவர்
அதனை அறிய இயலாதவர்.                     பாமரன் பொருள்

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.    குறள் # 428
பயப்படவேண்டியதற்கு பயப்படாதது அறியாமை. அஞ்சவேண்டியதற்கு
அஞ்சுவது அறிவாளிகள் செயல்,                  பாமரன் பொருள்

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.    குறள் # 429.
பின்னர்வரப்போவதை அறிந்து காக்கும்அறிவுடையோர்க்கு இல்லை
அதிர்ச்சிதரும்படி வரும் துன்பம்.                 பாமரன் பொருள்

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.        குறள் # 430
அறிவுடையவர் எல்லாம் உடையவரே. அறிவில்லாதவர்
என்ன உடையவரானாலும் ஏதும் இல்லாதவரே.     பாமரன் பொருள்

12 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பயப்படவேண்டியதற்கு பயப்படாதது அறியாமை. அஞ்சவேண்டியதற்கு
அஞ்சுவது அறிவாளிகள் செயல்,

அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... தலைப்பும் அருமை...

தொடர வாழ்த்துக்கள் ஐயா...

Unknown சொன்னது…

இராஜராஜேஸ்வரி said...
பயப்படவேண்டியதற்கு பயப்படாதது அறியாமை. அஞ்சவேண்டியதற்கு
அஞ்சுவது அறிவாளிகள் செயல்,
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!//

தங்கள் வருகைக்கு நன்றி. கருத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி

Unknown சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் said...
//அருமை... தலைப்பும் அருமை... தொடர வாழ்த்துக்கள் ஐயா..//

உங்களது ஊக்குவிப்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

இளமதி சொன்னது…

அறிவுடமை பற்றி அற்புதமான குறளும் கருத்துக்களும்!

அருமை ஐயா!... வாழ்த்துக்கள்!

Unknown சொன்னது…

இளமதி said...
//அறிவுடமை பற்றி அற்புதமான குறளும் கருத்துக்களும்! அருமை ஐயா!... வாழ்த்துக்கள்//

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//உலகம் எவ்வாறு நடந்துகொள்கிறதோ, உலகத்தோடு அவ்வழியில் நடப்பதுதான் அறிவு, //

எல்லாக்குறளும் பொருளும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

Unknown சொன்னது…

வை.கோபாலகிருஷ்ணன் said...
//உலகம் எவ்வாறு நடந்துகொள்கிறதோ, உலகத்தோடு அவ்வழியில் நடப்பதுதான் அறிவு, // எல்லாக்குறளும் பொருளும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

தலை மறைவான அதிரா சொன்னது…

உண்மைதான், பயப்படவேண்டியவற்றிற்கு பயந்துதான் ஆக வேண்டும்.

Unknown சொன்னது…

athira said...
//உண்மைதான், பயப்படவேண்டியவற்றிற்கு பயந்துதான் ஆக வேண்டும்//

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி

மகேந்திரன் சொன்னது…

பெரும்பொருள் கொண்ட திருமறை குறளுக்கு
அழகிய விளக்கம் தந்தீர்கள் ஐயா...
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை.. மிகச்சரியான சொல்வளம்..
இவை இப்படித்தான் இதற்கு இப்படித்தான் நடத்தல் வேண்டும்...
நிமிர்ந்து நட என்று சொன்ன இலக்கியம் தான்
"ங"ப்போல் வளை என்றும் சொல்கிறது..
அருமையான பதிவு ஐயா..
முதன்முறை தங்கள் தளம் வந்தேன்
மகிழ்வுற்றேன்.
தொடர்கிறேன்.

viyapathy சொன்னது…

மகேந்திரன் said...
பெரும்பொருள் கொண்ட திருமறை குறளுக்கு
அழகிய விளக்கம் தந்தீர்கள் ஐயா...
................................நிமிர்ந்து நட என்று சொன்ன இலக்கியம் தான்
"ங"ப்போல் வளை என்றும் சொல்கிறது..
அருமையான பதிவு ஐயா..முதன்முறை தங்கள் தளம் வந்தேன்
மகிழ்வுற்றேன். தொடர்கிறேன்.

தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி. அருமையான கருத்துக்களைச் சொல்லி ஊக்குவிப்பதற்கும் நன்றி.

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.