பொருட்பால்
அரசியல்
அதிகாரம் ; குற்றம் கடிதல்
குறள் 431 முதல் 435 வரை
செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. குறள் #
431
கர்வமும் கோபமும் இழிவான நடத்தையும் இல்லாதவர்களுடைய
மேன்மை மதிக்கத்
தக்கது. பாமரன் பொருள்
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு, குறள் # 432
பொருள் கொடாமையும் மாட்சியில்லாத
மானமும் தீயவற்றில்
மகிழ்வதும் தலைவருக்கு கேடாகும். . பாமரன் பொருள்
தினைத்துணையாங் குற்றம்
வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். குறள் #
433
தினையளவே குற்றம் நேரினும்
அதை பனையளவு பெரிதாகக்
கருதுவர்
பழிபாவங்களுக்கு அஞ்சுபவர் பாமரன் பொருள்
குற்றமே காக்க பொருளாகக்
குற்றமே
அற்றந் தரூஉம் பகை. குறள் #
434.
குற்றம் வராமையை
குறிக்கோளாகக் கொள்க,
குற்றமே
அழிவைத்
தரும் பகையாகும். பாமரன் பொருள்
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். குறள்
# 435
குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன்
வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். . . பாமரன் பொருள்
11 கருத்துகள்:
அருமையான குறள்களும் அற்புதமான விளங்களும்.
//குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். //
பாராட்டுக்கள் ஐயா.பகிர்வுக்கு நன்றிகள்.
/
அருமையான குறள்களும் அதன் விளக்கமும்!
குற்றம் செய்தவன் வாழ்ஜையில் நிம்மதி கொள்வதென்பதேது...
குற்றத்தைச் செய்து குன்றுவதைவிட அதைச் செய்யாதிருப்பது மேன்மையல்லவா..
வாழ்த்துக்கள் ஐயா!
வை.கோபாலகிருஷ்ணன் said...
அருமையான குறள்களும் அற்புதமான விளங்களும்.
//குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும். //
பாராட்டுக்கள் ஐயா.பகிர்வுக்கு நன்றிகள்.//
கருத்துப் பதிவிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி
இளமதி said...
//குற்றம் செய்தவன் வாழ்ஜையில் நிம்மதி கொள்வதென்பதேது...
குற்றத்தைச் செய்து குன்றுவதைவிட அதைச் செய்யாதிருப்பது மேன்மையல்லவா//
மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் அருமை. தங்கள் வருகைக்கம் கருத்துப் பதிவிற்கும் நன்றி
விளக்கம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...
திண்டுக்கல் தனபாலன் said...
//விளக்கம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்தப் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
குற்றம் வரும் முன்பே வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கை நெருப்புமுன் வைக்கப்படும் வைக்கோல் போல அழியும்.
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
இராஜராஜேஸ்வரி said...
.
//அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
வழமைபோல பகிர்வும் கருத்தும் அருமை.
athira said...
வழமைபோல பகிர்வும் கருத்தும் அருமை.
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.
தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,
தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .
வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.