பொருட்பால் அரசியல்
இறைமாட்சி
குறள் 381 முதல் 385 வரை
படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. குறள் # 381
படை, மக்கள், செல்வம், நல்ஆலோசகர், நட்புநாடு, பாதுகாப்பு ஆறும்
உடையவர் ஆட்சிசெய்பவர்களுள் சிறந்தவர் பாமரன் பொருள்
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு குறள் # 382
அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும்
நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு பாமரன் பொருள்
தூங்காமை கல்வி துணிவுஉடமை இம்மூன்றும்
நீங்கா நிலன்ஆள் பவர்க்கு குறள் # 383
காலந்தாழ்த்தாமை கல்விதுணிவுடைமை ஆகியமூன்றும்
நீங்கக்கூடாது ஆட்சி நடத்துபவர்க்கு. பாமரன் பொருள்
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு குறள் # 384
அறநெறிதவறாது தீயவை விலக்கி வீரம்குறையாது
மானத்துடன் நடப்பதே நல்ல ஆட்சி. பாமரன் பொருள்
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு குறள் # 385
வரும்வழிஉண்டாக்குதல் சேர்த்தல் காத்தல்
பாதுகாத்தவற்றை
பிரித்துவழங்கல் ஆகியவை செய்யவல்லதே அரசு. பாமரன் பொருள்
6 கருத்துகள்:
அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
இராஜராஜேஸ்வரி said...
"அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்"
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி..
மிக அருமையான இலகுவான பொருள் கண்டேன்!
வாழ்த்துக்கள் ஐயா!
இளமதி said...
//மிக அருமையான இலகுவான பொருள் கண்டேன்!
வாழ்த்துக்கள் ஐயா!//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்துக்கும் நன்றி
அச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கம்உடைமை எனும் நான்கும்
எப்போதும் நீங்காமை ஆள்பவர்க்கு இயல்பானபண்பு //
ஆம், உண்மை.
அருமையான விளக்கம்.
கோமதி அரசு said...
//ஆம், உண்மை.
அருமையான விளக்கம்.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.