திருக்குறள் பொருட்பால் அரசியல்
அநிகாரம்; அறிவுடைமை
குறள் 421 முதல் 425 வரை
அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண். குறள் # 421
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை. பாமரன் பொருள்.
.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு. குறள் # 422.
சென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையை விலக்கி
நல்வழியில் செல்லவைப்பது அறிவு. பாமரன் பொருள்.
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் # 423.
எக்கருத்தை யார்யார் சொல்லக் கேட்டாலும்
அப்பொருளின்
உண்மைத்தன்மையை காண்பது அறிவு. பாமரன் பொருள்.
எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்பது அறிவு. குறள் # 424.
பிறர்மனதில் பதியுமாறு எளிதாகக் கூறி தான்பிறர் பேச்சின்
நுட்பமான பொருளை காண்பது அறிவு. பாமரன் பொருள்.
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு. குறள் # 425
உலகத்து உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது அறிவுடைமை
அதனால் மலர்வதும்
வாடுவதும் இல்லாதது அறிவு. பாமரன் பொருள்.
12 கருத்துகள்:
குறளும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
//குறளும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
இந்த அதிகாரத்தை ஒரு முக்கிய பதிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளேன்...
குழந்தைகளின் படைப்புகள் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Sacrifice-Human-development.html
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை
அருமை..பாராட்டுக்கள்..!
உண்மைதான் ஐயா!.. எந்த வயதிலும் அறிவென்பது இல்லையாயின் எத்தனை இருந்தும் ஒன்றுமே இல்லாவதவனுக்குச் சமம்!..
சிறந்த கருத்துக்கள் ஐயா! வாழ்த்துக்கள்!
திண்டுக்கல் தனபாலன் said...
//இந்த அதிகாரத்தை ஒரு முக்கிய பதிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளேன்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.. உங்கள் முக்கிய பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
இராஜராஜேஸ்வரி said...
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்
அழிக்க முடியாத உட்கோட்டை
//அருமை..பாராட்டுக்கள்.//
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.
இளமதி said...
//உண்மைதான் ஐயா!.. எந்த வயதிலும் அறிவென்பது இல்லையாயின் எத்தனை இருந்தும் ஒன்றுமே இல்லாவதவனுக்குச் சமம்!..
சிறந்த கருத்துக்கள் ஐயா! வாழ்த்துக்கள்!'//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி
//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்// தலைப்பே அருமை.... இது நிஜமேதான்ன்.... ஆனா சில வேளைகளில்.. அறிவும் மங்கி விடுகிறது... அதுதான் அழிவுக்கு காரணமாகி விடுகிறது.. அழகிய குறள்களும்.. அருமையான விளக்கங்களும்.
athira said...
//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்// தலைப்பே அருமை.... இது நிஜமேதான்ன்.... ஆனா சில வேளைகளில்.. அறிவும் மங்கி விடுகிறது... அதுதான் அழிவுக்கு காரணமாகி விடுகிறது.. அழகிய குறள்களும்.. அருமையான விளக்கங்களும்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி
அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்//
உண்மை. அழிவை தடுக்கும் ஆயுதம் அறிவுதான். அருமையான குறள் விளக்கம்.
கோமதி அரசு said...
//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்//
உண்மை. அழிவை தடுக்கும் ஆயுதம் அறிவுதான். அருமையான குறள் விளக்கம்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.