. பொருட்பால், அரசியல்
அதிகாரம் ; கேள்வி
குறள் 416 முதல் 420 வரை
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் குறள் # 416.
எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் அந்த அளவேயானாலும்
நிறைந்த பெருமை தரும். பாமரன் பொருள்
பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்
இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர். குறள் 417.
தவறாக உணர்ந்தாலும் அறிவற்றசொல் சொல்லமாட்டார் ஆராய்ந்தறிந்து
நிரம்பிய கேள்வியறிவு உடையவர். பாமரன் பொருள்
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத
செவி. குறள் # 418
ஓசையை காது கேட்டாலும் செவிட்டு தன்மையானதே கேள்வியறிவால்
துளைக்கப் படாத காது. பாமரன் பொருள்
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது. குறள் # 419.
நுண்ணிய கேள்விஅறிவு இல்லாதவர் பணிவான சொற்களைப்
பேசுபவராக ஆவது கடினம். பாமரன் பொருள்
செவியின் சுவைஉணரா வாய்உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என். குறள் # 420
கேட்கும் சுவை உணராது வாயின் சுவை மட்டும்
உணரும் மக்கள்
இறந்தாலும் வாழ்ந்தாலும்
என்ன பயன். பாமரன் பொருள்
11 கருத்துகள்:
தலைப்பும் அருமையாக உள்ளது ஐயா...
திண்டுக்கல் தனபாலன் said...
//தலைப்பும் அருமையாக உள்ளது ஐயா.//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
நிறைந்த பெருமை பேசும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..
இராஜராஜேஸ்வரி said...
//நிறைந்த பெருமை பேசும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும், பாராட்டுக்கும் நன்றி
திண்டுக்கல் தனபாலன் said...
//பறக்க வாருங்கள் //
பறந்து வந்து படித்துப் பார்த்துவிட்டேன் நன்றி
எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள்
நிறைந்த பெருமை பேசும் அருமையான பகிர்வுகள்.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
வை.கோபாலகிருஷ்ணன் said...
//நிறைந்த பெருமை பேசும் அருமையான பகிர்வுகள்.
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்//
தங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி
எவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் அந்த அளவேயானாலும்
நிறைந்த பெருமை தரும். //
சிறிதாய் இருந்தாலும் நல்லதை தினம் கேட்டால் நல்லது.தான்.
அருமையாக சொன்னீர்கள்.
நீங்கள் நாளும் நல்லதையே சொல்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
உண்மைதான் உருவத்திலே எதுவுமில்லை(பெரிதோ சிறிதோ).. விஷயம் எங்கிருக்கோ அங்குதானே பெருமை..
நல்ல விளக்கங்கள்.
கோமதி அரசு said..
//சிறிதாய் இருந்தாலும் நல்லதை தினம் கேட்டால் நல்லது.தான்.
அருமையாக சொன்னீர்கள்.
நீங்கள் நாளும் நல்லதையே சொல்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்//
தங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
athira said...
//உண்மைதான் உருவத்திலே எதுவுமில்லை(பெரிதோ சிறிதோ).. விஷயம் எங்கிருக்கோ அங்குதானே பெருமை.. நல்ல விளக்கங்கள்.//
தங்கள் வருகைக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி
கருத்துரையிடுக
தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.