வெள்ளி, 19 அக்டோபர், 2012

இனிய சொல் எப்போதும் இன்பம் தரும்


பணிவுஉடையவர் இனிதேபேசுபவர் ஆவது ஒருவருக்கு
நகைபோல மற்றவை அல்ல
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு  
அணிஅல்ல மற்றுப் பிற       குறள் 95

தீயவை மறைந்து நன்மை பெருகும் நல்லவற்றை
எதிர்நோக்கி இனிதே பேசினால் 
அல்லவை தேயஅறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்    குறள் 96 

மகிழ்ச்சிதந்து நன்மையும் தரும் பயன்தருபவற்றை
பண்போடு பேசப்படும் சொல்
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்       குறள் 97

தீமைநீங்கிய இனியசொல் பிற்காலத்திலும்
இப்போதும் இனிமை தரும்
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்     குறள் 98

இனியசொல் இன்பம்தருவதைக் காண்பவர் இப்படி
கடுமையான சொற்களைப் பேசுவரோ!
இன்சொல் இனிதுஈன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது        குறள் 99

இன்சொற்கள் இருக்க தீச்சொற்கள் பேசுவது
பழமிருக்க காயை சாப்பிடுவதுபோன்றது
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந்து அற்று      குறள் 10

2 கருத்துகள்:

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா சொன்னது…

உண்மையேதான் இனிய சொல் எப்பவுமே இன்பம் தரும். கனியிருப்பக் காய் கவர்வானேன்... அழகிய பதிவு.

Avainayagan சொன்னது…

athira said...
//உண்மையேதான் இனிய சொல் எப்பவுமே இன்பம் தரும். கனியிருப்பக் காய் கவர்வானேன்... அழகிய பதிவு//

தங்கள் பதிவிற்கும் பாராட்டுக்கும் நன்றி`.


கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.